ரெயில்வே அமைச்சகம்
மும்பை அந்தேரி ரயில் நிலையம் அருகே ரயில் பாதையின் மீது சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது
प्रविष्टि तिथि:
03 JUL 2018 1:26PM by PIB Chennai
மேற்கு ரயில்வேயின் விலேபார்லே – அந்தேரி பிரிவில், அந்தேரி ரயில் நிலையம் அருகே, சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதி, இன்று காலை 7.30 மணி அளவில் இடிந்து ரயில்பாதை மீது விழுந்தது. இதில், ரயில்பாதையின் மின்சார லைன்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக, கோரேகான் – பாந்த்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கூப்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மேலாண்மைக் குழு, தீயணைப்பு வண்டிகள் மேற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர், மும்பை பிரிவின் ரயில்வே மேலாளர் மற்றும் மூத்த அமைசர்ச்கள் ரயில்பாதையை சீரமைக்கும் பணியை பார்வையிட்டனர்.
ரயில்வே ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தேரி 022-67630054, சர்ச்கேட் 022-67622540, போரிவலி 022-67634053, மும்பை மத்தி 022-67644257, சூரத் 0261-2401791
(रिलीज़ आईडी: 1537473)
आगंतुक पटल : 114