பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

அமைச்சகங்களில் மகளிர்க்கு அதிகாரம்: மேனகா காந்தி வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 07 JUN 2018 3:44PM by PIB Chennai

“மகளிர்க்கு அதிகாரம் அளிப்பதை அதிகரிக்க கு மகளிர் விஷயத்தில் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும், அது தொடரவேண்டும்” என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “இது தொடர்பாக பல்வேறு முன்முயற்சிகள், திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துவதற்கு அமைச்சகங்களுக்கு இடையில் முழுமையான ஒருங்கிணைப்பு தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:

“ஒட்டுமொத்த ஆளுகைத் திட்டத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் வேண்டுமானால், மத்தியில் உள்ள முக்கியமான அமைச்சகங்களில் அவர்கள் மையப் புள்ளியாக இருப்பது அவசியம். அரசின் எல்லாத் திட்டங்களிலும் மகளிருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு இணைச் செயலர் (அல்லது இணைச்செயலர் அந்தஸ்தில் உள்ளவர்) தலைமையில் ஒரு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அந்தப் பிரிவு கருத்தியல் நிலையில் இருக்கும் அரசுத் திட்டங்கள் செயல்வடிவம் பெற்று, உத்வேகத்துடன் கடைசிக் கோடி வரையில் நிறைவேற்றுவதற்காகச் செயல்பட வேண்டும். மகளிர்க்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக உள்ள கோரிக்கை செயல்வடிவம் பெறுவதில் மிகப் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும்.

மகளிர் பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உள்துறை அமைச்சகம் புதிய பிரிவை அமைப்பது என்று முடிவு செய்துள்ளது. அந்தப் பிரிவு மகளிர்க்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுடன் இணைந்து, முழுக் கவனம் செலுத்தும்”

இவ்வாறு அமைச்சர் மேனகா காந்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குறிப்பிடத் தக்க முன்முயற்சிகளையும் சாதனைகளையும் அமைச்சர் பட்டியலிட்டார். இந்த முயற்சிகள் வெற்றியடைவதற்கு இணைந்து துணைபுரியும் அமைச்சகங்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

 

 

 

***


(रिलीज़ आईडी: 1534830) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Malayalam