நிதி அமைச்சகம்

2018 மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல்

Posted On: 01 JUN 2018 12:31PM by PIB Chennai

2018 மே மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.94,016 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.15,866 கோடி. மாநிலங்களின் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.21,691 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.49,120 கோடி (இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.24,447 கோடியும் அடங்கியது)  செஸ் வரி  ரூ.7,339 கோடி (இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.854 கோடி உட்பட). 2018 மே 31ம் தேதியுடன் முடிவடைந்தக் காலத்திற்கு  ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. விவரக் கணக்கு அறிக்கைகள் எண்ணிக்கை 62.47 லட்சமாகும்.

 2018 மே மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் ஈட்டிய மொத்த வருவாய்  தீர்வுகளுக்குப் பின்னர், மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.28,297 கோடியாகவும், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி ரூ.34,020 கோடியாகவும் இருந்தது.   

  கடந்த மாதத்தைவிட மே மாதத்தில் வருவாய் வசூல் (ரூ.94,016 கோடி) குறைவாக இருந்தபோதிலும், கடந்த நிதியாண்டில் வசூலான  மாதாந்திர சராசரி வருவாயைவிட (ரூ.89,885 கோடி) அதிகமாகும். ஆண்டுக் கணக்கு முடிவடைவதன் தாக்கம் காரணமாக  ஏப்ரல் மாத வருவாய் அதிகமாக இருந்தது.

    29.05.2018 அன்று 2018 மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடான ரூ.6,696 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, 2017-18 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த ஜிஎஸ்டி இழப்பீடு (2017 ஜூலை முதல் 2018 மார்ச் முடிய) ரூ.47,844 கோடி  மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

------


(Release ID: 1534117) Visitor Counter : 154
Read this release in: Malayalam , English , Urdu , Marathi