மத்திய அமைச்சரவை
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மொபைல் இணைப்பு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAY 2018 3:49PM by PIB Chennai
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் 96 மாவட்டங்களில் உள்துறை அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட மக்கள் வசிக்கும் உள்ளடக்கப்படாத, 4072 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளை அளிப்பதற்கு யுனிவர்சல் சேவை பொறுப்பு நிதி ஆதரவுடனான திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 7,330 கோடியாக இருக்கும்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த கட்டமைப்பு பாதுகாப்பு பணியாளர்களால் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் உள்ளடக்கம் செய்யப்படாத குடியிருப்பு கிராமங்களில் உள்ள மக்கள் இந்தப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் மொபைல் சேவைகளை அளிக்கும். இது பின் தங்கிய, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இ-நிர்வாக செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் டிஜிட்டல் மொபைல் இணைப்பை அளிக்கும்.
10 மாநிலங்களில் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை:
|
வ.எண்.
|
மாநிலங்கள்
|
மாவட்டங்கள்
|
கோபுரங்களின் எண்ணிக்கை
|
|
1
|
ஆந்திர பிரதேசம்
|
8
|
429
|
|
2
|
பீகார்
|
8
|
412
|
|
3
|
சத்தீஸ்கர்
|
16
|
1028
|
|
4
|
ஜார்க்கண்ட்
|
21
|
1054
|
|
5
|
மத்திய பிரதேசம்
|
1
|
26
|
|
6
|
மகாராஷ்டிரா
|
2
|
136
|
|
7
|
ஒடிசா
|
18
|
483
|
|
8
|
தெலங்கானா
|
14
|
118
|
|
9
|
உத்தர பிரதேசம்
|
3
|
179
|
|
10
|
மேற்கு வங்கம்
|
5
|
207
|
|
மொத்தம்
|
10 மாநிலங்கள்
|
96
|
4072
|
Background:
அ. இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகள் முதல் கட்ட திட்டம்
- இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொபைல் சேவைகளை அளிக்கும் முதல் கட்ட திட்டத்தில் ரூ. 4080.78 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு திட்டம் நிறைவடைய உள்ளது.
- மொத்தம் 2335 இடங்களில் இன்று வரை 2335 இடங்களில் செயல்படுகின்றன
B. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட திட்டம்
- 10 மாநிலங்களின் 96 மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் தொடர்புத் தேவைக்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி உள்துறை அமைச்சகம் 4072 கோபுரம் அமையும் இடங்களை அடையாளம் கண்டு தொலைத்தொடர்புத் துறைக்கு 2017 அக்டோபர் 27ம் தேதி தெரிவித்துள்ளது.
- இரண்டாம் கட்டத்தில் சந்தாதாரர்களின் தேவைக்கேற்ப தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் இணைப்பு அளிக்க இந்த இடங்களில் தற்போது 2 மற்றும் 4ஜி தொழில்நுட்பம் அளிக்கப்பட்டுள்ளது.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1533246)
வருகையாளர் எண்ணிக்கை : 240