மத்திய அமைச்சரவை

வடகிழக்கு மண்டல விரிவான தொலைத்தொடர்பு திட்டத்தின்கீழ், மேகாலயாவில் செல்ஃபோன் சேவைகளை ஏற்படுத்த, உலகளாவிய சேவை உதவி நிதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 MAY 2018 3:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு மண்டலத்திற்கான விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தை மேகாலயாவில் ரூ. 3,911 கோடி செலவில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு உலகளாவிய சேவை உதவி நிதியத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுவதுடன், வடகிழக்கு மண்டலத்திற்கான விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான உயர்த்தப்பட்ட செலவுத் தொகையான ரூ. 8,120.81 கோடிக்கும், (10.09.2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ. 5,336.18 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது) அனுமதி அளிக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்:

இன்றியமையாத அம்சங்கள்:

  1. மேகாலயாவில் இதுவரை செல்ஃபோன் சேவை இல்லாத பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 2ஜி + 4ஜி செல்ஃபோன் சேவைகளை ஏற்படுத்துதல்.
  2. மேகாலயாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை ஒட்டி, தடையற்ற 2ஜி + 4ஜி செல்ஃபோன் சேவைகளை ஏற்படுத்துதல்.

பலன்கள்:

  1. தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதன் மூலம், மேகாலயாவில் செல்ஃபோன் இணைப்பை பரவலாக்கி, குறைந்த கட்டணத்தில், சீரான தொலைத்தொடர்பு, தகவல் மற்றும் மக்களுக்கான ஆளுகைக்கு வழிவகுக்கும்.
  2. மேகாலயாவில் இதுவரை செல்ஃபோன் சேவை கிடைக்காத பகுதிகளில் பொது செல்ஃபோன் இணைப்புகளை ஏற்படுத்துவதுடன், குடிமக்களுக்கு அதிகாரமளிக்கவும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பலன்களால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
  3. அகண்ட அலைவரிசை மற்றும் இணையதள இணைப்புகள் கிடைக்கச் செய்வதன் மூலம், தொலைத் தொடர்பு சேவை கிடைக்காத பகுதிகளைச் சேர்ந்த மக்களின் புதுமையான திறன்கள் மேம்படும்.

------------



(Release ID: 1533242) Visitor Counter : 150