மத்திய அமைச்சரவை

இந்தியாவும் ஈக்விடோரியல் கினியாவும் மூலிகை செடிகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்த்த்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:43PM by PIB Chennai

இந்தியாவுக்கும் ஈக்விடோரிய கினியாவுக்கும் இடையே மூலிகை செடிகள் துறையில் ஒத்துழைப்புக்காக செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை பிந்தைய ஒப்புதலை அளித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலிகைச் செடிகள் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும்.

ஆய்வு நடத்த தேவையான நிதி ஆதாரம், பயிற்சி வகுப்புகள், மாநாடு/கூட்டங்கள் நடத்தத் தேவையான நிதி ஆதாரம் தற்போது ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்தும் தேசிய மூலிகைச் செடிகள் வாரியத்தின் தற்போதைய திட்டங்களில் இருந்து பெறப்படும்.

பின்னணி:

வேளாணுக்கு ஏற்ற 15 மண்டலங்கள் கொண்ட வளமான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. 17000-18000 செடிகளில் 7000க்கும்  மேற்பட்டவை மருத்துவக் குணங்கள் கொண்டவையாகும். சுமார் 1178 வகை மூலிகைச் செடிகள் வர்த்தகம் செய்யப்படுவதுடன் 242 மூலிகைகள் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் அளவுக்கு நுகரப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. மூலிகைச் செடிகள் பாரம்பரிய மருத்துவத்திற்கான பெரும் ஆதாரமாக இருப்பதுடன் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உடல் நலம் மற்றும் வாழ்வாதாரத்தை அளிப்பதாகவும் உள்ளது. உலகின் சுகாதார வர்த்தகத்தில் தற்போது 120 பில்லியன் டாலராக உள்ளது வரும் 2050ம் ஆண்டில் 7 டிரில்லியன் டாலரை எட்டும் எனத் தெரிகிறது. இரு நாடுகளின் புவியியல் சூழல் அம்சங்களுக்குப் பொதுவாக உள்ள ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளன.

 

*****



(Release ID: 1532488) Visitor Counter : 145