தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஓய்வூதியதாரர்கள் உமாங் செயலி மூலம் “ஓய்வூதிய கணக்கு புத்தகத்தைக் காட்டுக” எனும் சேவையை ஈ.பி.எஃப்.ஓ. அறிமுகம் செய்துள்ளது

Posted On: 03 MAY 2018 12:48PM by PIB Chennai

சந்தாதாரர்களுக்கு ஈ-சேவைகள் மூலம் நிறைய வசதிகளை செய்து கொடுத்துள்ள ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ) தற்போது “உமாங் செயலி” (UMANG app) மூலம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.  இந்தச் சேவையில் கணக்குப் புத்தகத்தை காட்டுக” என்பதை கிளிக் செய்ய ஓய்வூதியதாரர் பி.பி.ஓ எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவிட வேண்டும்.  தரப்பட்ட தகவல் சரியானது என்பதை உறுதி செய்த பின் ஓய்வூதியதாரரின் பதிவு செய்யப்பட்ட செல்பேசிக்கு ஓ.டி.பி அனுப்பப்படும்.  ஓ.டி.பி. எண்ணினை பதிவிட்டால், ஓய்வூதியதாரர் கணக்குப் புத்தகம் திரையில் தெரியும்.  இதில் ஓய்வூதியதாரரின் பெயர், பிறந்த தேதி, கடைசியாக ஓய்வூதியம் செலுத்தப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.  நிதியாண்டு வாரியாக ஒட்டுமொத்த கணக்குப் புத்தக விவரங்களையும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது.  ஊழியர்களை மையப்படுத்திய சேவைகளாக ஈ.பி.எஃப். கணக்குப் புத்தகத்தை காட்டுக, உரிமை கோருதல், உரிமை கோரியதன் தற்போதைய நிலவரம் ஆகியவையும், நிறுவன உரிமையாளர்களை மையப்படுத்தியதாக நிறுவனத்தின் ஐ.டி மூலம் பணம் செலுத்திய விவரங்கள் டி.ஆர்.ஆர்.என். நிலவரம் ஆகியவையும் பொது சேவைகளாக நிறுவனத்தை தேடுக, ஈ.பி.எஃப்.ஓ அலுவலகத்தை தேடுக, உரிமை கோரியதன் நிலவரத்தை அறிக, எஸ். எம். எஸ்-ல் கணக்கு விவரங்கள் மிஸ்டு கால் மூலம் கணக்கு விவரங்கள்  ஆகியவையும் ஓய்வூதியதாரர்கள் சேவைகளாக ஜீவன் பிரமானின் தற்போதைய நிலை என்பதும், ஈ.கே.ஒய்.சி சேவைகளாக ஆதார் விவரங்களும், உமாங் செயலி மூலம்  ஈ.பி.எஃப்.ஓ  அளிக்கும் ஈ-சேவைகள் ஏற்கனவே கிடைத்து வருகின்றன.


(Release ID: 1531218) Visitor Counter : 388