பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

“பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்” திட்டம்: தில்லியில் நாளை தேசிய கருத்தரங்கு

Posted On: 03 MAY 2018 12:12PM by PIB Chennai

பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 244 மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக தேசிய மாநாட்டை மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் நாளை (2018, மே 4) நடத்துகிறது.

இந்த ஒருநாள் மாநாட்டில் மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி, மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். 244 மாவட்டங்களின் தொடர்பு அலுவலர்கள், மாநில அளவிலான  தொடர்பு அலுவலர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்பர்.

இத்திட்டத்தைச் செயல்படுத்திவருவோர் தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர். அத்துடன், இதில் இணையும் பதிய மாவட்டத்தினர் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை ஊக்குவிக்கும் ஆலோசனைகளையும் அளிப்பர். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மகளிர் நலன் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறை ஆகிய துறைகளின் முதன்மைச் செயலர்கள், 244 மாவட்டங்களின் துணை ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்பர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுனஜுனுவில் கடந்த மார்ச் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் நாடு முழுவதும் உள்ள (2011ம் ஆண்டு புள்ளி நிலவரப்படி) 640 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கெனவே உள்ள 161 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் புதிதாக 244 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். இவை தவிர 235 மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

*****



(Release ID: 1531216) Visitor Counter : 492