பிரதமர் அலுவலகம்

ஹேமவதி நந்தன் பகுகுணா நினைவு அஞ்சல் தலையை பிரதமர் வெளியிட்டார்.

प्रविष्टि तिथि: 25 APR 2018 2:10PM by PIB Chennai

உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர், காலஞ்சென்ற திரு. ஹேமவதி நந்தன் பகுகுணா நினைவு அஞ்சல் தலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஜனநாயக பண்புகளை பேணிப் பாதுகாக்கும தலைவராக திகழ்ந்தவர் திரு. பகுகுணா என்றார். மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே, ஆச்சார்யா நரேந்திர தேவ், ராம் மனோகர் லோகியா மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற பல்வேறு தலைவர்களால் ஈர்க்கப்பட்டவர் திரு. பகுகுணா என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் மலைப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், கல்வித்துறையிலும் திரு. பகுகுணா ஆற்றிய பணிகளை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திரு. விஜய் பகுகுணா, டாக்டர் ரீட்டா பகுகுணா உள்ளிட்ட திரு. ஹேமவதி நந்தன் பகுகுணாவின் குடும்ப உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

***


(रिलीज़ आईडी: 1530808) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Kannada