மத்திய அமைச்சரவை

உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம் மூலம், நீண்டகால அடிப்படையில், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத்தாது வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 APR 2018 1:13PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம் மூலம், நீண்டகால அடிப்படையில், ஜப்பானீஸ் ஸ்டீல் மில்ஸ் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனங்களுக்கு 64% இரும்புத்தன்மை கொண்ட இரும்புத்தாதுவை மேலும் 5 ஆண்டுகளுக்கு (1.4.2018 முதல் 31.3.2023 வரை)  வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவரம் :

  1. தற்போதைய நீண்டகால ஒப்பந்தங்கள் 31.3.2018 வரை செல்லத்தக்கதாகும். ஜப்பான் ஸ்டீல் மில்ஸ் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ உடனான புதுப்பிக்கப்பட்ட நீண்டகால ஒப்பந்தங்கள், 1.4.2018 முதல் 31.3.2023 வரை 5 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாகும்.
  2. தேசிய தாதுக்கள் மேம்பாட்டுக்கழகம் மூலமாகவோ தேசிய தாதுக்கள் மேம்பாட்டுக்கழகம் மூலமாக இல்லாமலோ, நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், பைலாதிலா சுரங்கத்திலிருந்து ஆண்டுக்கு 1.81 மில்லியன் மெட்ரிக் டன் இரும்புப் பாளங்களும், 2.71 மெட்ரிக் டன் இரும்புத்தாதுத் துகள்களும், ஆண்டுக்கு 3.80 மில்லியன் டன் (குறைந்தபட்சம்)  முதல் 5.50 மில்லியன் டன் (அதிகபட்சம்) வரை இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்.
  3. ஜப்பானீஸ் ஸ்டீல் மில்ஸ் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனங்களுக்கு உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தக கழகம் மூலம், 64% தூய இரும்புத்தன்மை கொண்ட இரும்புத் தாதுவை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :

    

ஜப்பானீஸ் ஸ்டீல் மில்ஸ்

 

ஆண்டுக்கு 3.00 ~ 4.30  மில்லியன் டன்

 

போஸ்கோ, தென்கொரியா

ஆண்டுக்கு 0.80 ~1 .20 மில்லியன் டன்

 

  1. தாதுக்களை எடுத்துச்செல்லும் செலவு உட்பட 2.8% வர்த்தக வரம்பு அடிப்படையில், உலோகங்கள் மற்றும் வர்த்தகக் கழகம் மூலம் தனி முகமை வாயிலாக, ஏற்றுமதி செய்யும் தற்போதைய கொள்கையும் தொடர்ந்து நீடிக்கும்.

பலன்கள் :

நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் இரும்புத்தாது ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்தியாவின் நீண்டகால நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடனான இருதரப்பு உறவு மேம்படுவதுடன், ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பும் அதன் மூலம் அன்னியச் செலாவணி கிடைக்கவும் இது வழிவகுக்கும்.

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் தாதுப்பொருட்களுக்குச் சர்வதேசச் சந்தை வாய்ப்பைக் கிடைக்கச் செய்வதுடன், நிலையான பொருளாதாரச் சூழலையும் உறுதி செய்யும். இதன் மூலம் சுரங்கம், போக்குவரத்து மற்றும் அவை சார்ந்த துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகுக்கும்.

பின்னணி :

இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குக் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பானுடனான இந்தியாவின் இருதரப்பு உறவில் இது ஒரு முக்கியப்பகுதியாகத் திகழ்கிறது. உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம், ஜப்பானீஸ் ஸ்டீல் மில்லுக்கு 1963ம் ஆண்டு முதற்கொண்டும், தென்கொரியாவுக்கு 1973ம் ஆண்டிலிருந்தும் இரும்புத்தாதுக்களை வழங்கிவருகிறது. ஜப்பானீஸ் ஸ்டீல் மில்ஸ் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனங்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு, இரும்புத்தாது வழங்குவதற்கான தற்போதைய நீண்டகால ஒப்பந்தம் 2018 மார்ச் 31-உடன் நிறைவடைகிறது. 24.06.2015 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், ஜப்பானீஸ் ஸ்டீல் மில்ஸ் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனங்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு, (2015 முதல் 2018 வரை) நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் இரும்புத்தாது வழங்க உலோகங்கள் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகத்திற்கு அனுமதி அளித்தது.



(Release ID: 1530216) Visitor Counter : 182