மத்திய அமைச்சரவை
இந்தியா-ஈரான் இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
14 MAR 2018 7:33PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-ஈரான் இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம், முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கவும், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களை இந்தியாவும், ஈரானும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளவும், இரட்டை வரிவிதிப்பை தவிர்க்கவும் வகைசெய்யும். மேலும், சமீபத்திய சர்வதேச தரத்தின் அடிப்படையில், இருவேறு மாறுபட்ட தரப்பினரின் தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியா, பிற நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படும். ஜி-20 பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD)-விதிமுறைகளின்படி, இந்தியா சமபங்கு வகிக்கக்கூடிய, கட்டமைப்பு பாதிப்பு மற்றும் லாப மாற்றத் திட்டத்தின் குறைந்தபட்ச அம்சங்களை நிறைவேற்ற இந்த உத்தேச ஒப்பந்தம் வகைசெய்யும்.
இந்தியாவை பொறுத்தவரை, வருமானவரிச் சட்டம் 1961, பிரிவு 90-ன்படி, எந்தவொரு வெளிநாடு அல்லது குறிப்பிட்ட பகுதியுடன், வருமானத்திற்கான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் வரிஏய்ப்பு தடுப்புக்கான ஒப்பந்தங்களை செய்துகொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது.
============
(Release ID: 1524479)