பிரதமர் அலுவலகம்

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வன்முறை அழிவுச்சம்பவங்களுக்கு பிரதமர் கடும் கண்டனம்

உள்துறை அமைச்சருடன் பிரதமர் கலந்தாலோசனை : குற்றவாளிகள் என காணப்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்

Posted On: 07 MAR 2018 10:43AM by PIB Chennai

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வன்முறை அழிவுச் சம்பவங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக குற்றம் இழைத்தவர்கள் என காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கூறினார். நாட்டின் சில பகுதிகளில் சிலைகளை கவிழ்க்கும் சம்பவங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் பேசினார். அப்போது இத்தகைய சம்பவங்களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இத்தகைய வன்முறை அழிவுச் சம்பங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

                                ---(Release ID: 1522909) Visitor Counter : 125