Economy

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தால் உற்பத்தித் துறையில் முன்னேற்றம்: ரூ.2.58 லட்சம் கோடி முதலீடு; 14.57 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

Posted On: 13 NOV 2026 5:46PM

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறைக் கொள்கை நடவடிக்கையாகும். 14 முக்கியத் துறைகளை உள்ளடக்கிய இத்திட்டத்திற்காக ரூ.1.91 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தி, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கிற்கு இத்திட்டம் வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது.

2026 ஜூன் 30 நிலவரப்படி, 14 துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 791 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.2.58 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தி/விற்பனை ரூ.23.79 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதுடன், ரூ.15.53 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 8.81 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள், 5.75 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகள் உள்பட 14.57 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப இதுவரை ரூ.36,754 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை இத்திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்துள்ளது. 2014-15-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது. ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்து ரூ.4.24 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. கைப்பேசி உற்பத்தி 33 மடங்கு உயர்ந்து ரூ.6.27 லட்சம் கோடியை எட்டியுள்ளதுடன், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 99.2% கைப்பேசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கைப்பேசி இறக்குமதி சுமார் 77% குறைந்துள்ளது. மருந்துப் பொருட்கள் துறையில் ரூ.15,000 கோடி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.46,744 கோடி முதலீடும், ரூ.4.02 லட்சம் கோடிக்கும் அதிகமான உற்பத்தியும் எட்டப்பட்டுள்ளது. மேலும் 191 மருந்துகள் முதல்முறையாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

தொலைத்தொடர்புத் துறையில் ரூ.5,627 கோடி முதலீடும், ரூ.21,033 கோடி ஏற்றுமதியும் பதிவாகியுள்ளது. குளிர்சாதன்ப் பெட்டிகள், எல்இடி விளக்குகள் துறையில் ரூ.7,670 கோடி முதலீடும், 54,049 நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. வாகனங்கள், உதிரிபாகங்கள் துறையில் ரூ.25,938 கோடி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.45,477 கோடி முதலீடும், 71,337 நேரடி வேலைவாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. உணவு பதனப்படுத்தும் துறையில் ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டின் கீழ், சுமார் 3.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, ரூ.5.13 லட்சம் கோடிக்கும் அதிகமான உற்பத்தி/விற்பனை பதிவாகியுள்ளது.

சிறப்பு எஃகு (Specialty steel) துறையில் ரூ.27,368 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. உயர் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தித் திட்டத்தின் கீழ், 48,337 மெகாவாட் திறன் கொண்ட தகடுகள் உற்பத்திக்கான கட்டமைப்பை உருவாக்க ஆணைகள் வழங்கப்பட்டு, சுமார் ரூ.52,900 கோடி முதலீடும், 44,400 நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் கொள்கை அளவிலான முயற்சியாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்று உலகிற்காக உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், உலகிற்காகப் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் உற்பத்தி சக்தியாக இந்தியாவை உயர்த்தியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160790&ModuleId=3&reg=3&lang=1

***

AD/PD/SH

(Explainer ID: 160794) आगंतुक पटल : 15
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Bengali