Social Welfare
உலக வானொலி தினம் 2026
Posted On:
12 FEB 2026 2:24PM
வானொலியை என்றும் பொதுச் சேவை ஊடகமாக கொண்டாட வேண்டும். காலங்களை கடந்து வானொலிக்கு என எப்போதும் தனி வசீகரம் உண்டு. நமக்கிடையே நெருக்கமானதாகவும், எளிமையானதாகவும் அன்றாட வாழ்வில் அமைதியாக ஊடுருவி, தோழமையையும், தகவலையும் வழங்குகிறது.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில், இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தது தொடங்கி வானொலி அறிவிப்புகளின் பல வரலாற்றுத் தருணங்கள் மக்களின் நினைவில் என்றும் நீங்கா இடத்ததை பிடித்துள்ளன.

வெறும் செய்திகளை மட்டும் வழங்காமல், பரந்து விரிந்த, பன்முகத்தன்மை கொண்ட தேசத்தை பொதுவான வழியில் ஒன்றிணைக்கும் பணியை வானொலி செவ்வனே செய்து வருகின்றன.

உலக வானொலி தினம், 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் 36-வது பொது மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 67-வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2-ம் உலகப் போருக்குப் பிறகு 1946-ல் ஐக்கிய நாடுகள் வானொலி, நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

“வானொலியும் செயற்கை நுண்ணறிவும்- செயற்கை நுண்ணறிவு ஒரு கருவியே தவிர, அது ஒரு குரல் அல்ல” என்ற கருப்பொருளை கொண்டு 2026-ம் ஆண்டு உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் 1936-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகில இந்திய வானொலி சுதந்திரத்திற்கு பின் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

“பலரின் நலனுக்காக, பலரின் மகிழ்ச்சிக்காக” என்ற ஒற்றை குறிக்கோளுடன் பலதரப்பட்ட மொழிகள் மற்றும் பலரின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக அகில இந்தியா வானொலி வளர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 591 ஒலிபரப்பு மையங்களுடன், இந்தியாவின் புவியியல் பரப்பளவில் ஏறக்குறைய 92 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 99.19 சதவீதத்தையும் உள்ளடக்கி அகில இந்திய வானொலி மையம் தனது சேவையை வழங்கி வருகிறது.

இந்தியாவின் பரந்த சமூக பொருளாதார மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் 23 மொழிகளிலும் 182 வட்டார மொழிகளிலும் நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி தொகுத்து வழங்கி வருகிறது.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலக்கட்டத்தில், நாட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான முதன்மை ஊடகமாக வானொலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி தேர்ந்தெடுத்தது, வானொலியுடன் தொடர்புடைய நீடித்த முக்கியத்துவத்தையும் நம்பிக்கையையும் கோடிட்டு காட்டுகிறது.
2014 அக்டோபர் 3-ல் தொடங்கப்பட்ட ‘மனதின் குரல்’ 130 பதிப்புகளை கடந்து அரசால் முன்னெடுக்கப்படும் மிக நீண்ட வானொலி மக்கள் தொடர்பு முயற்சிகளில் ஒன்றாக திகழ்கிறது. கல்வியறிவு, இணைய அணுகல் மற்றும் புவியியல் தடைகளைத் தாண்டி, டிஜிட்டல் யுகத்திலும் வானொலி எவ்வாறு வெகுஜன மக்களை தொடர்பு கொள்வதற்கான கருவியாக திகழ்கிறது என்பதை எடுத்துகாட்டுகிறது.

மனதின் குரல் நிகழ்ச்சி வெற்றியின் மூலம் சமகால ஊடக போட்டிகளுக்கு இடையே, பரந்து விரிந்த தேசத்தில் மக்களுடனான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக வானொலி உருவெடுத்து உள்ளது.
உலக வானொலி தினம், வானொலியை ஒரு நம்பகமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஊடகமாகத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. டிஜிட்டல் மயமாக்கலுக்கு நடுவே பலதரப்பட்ட மக்களை சென்றடைவதிலும், மொழி மற்றும் இணைய இணைப்புத் தடைகளைத் தாண்டுவதிலும், பொதுத் தகவல், கல்வி மற்றும் பேரிடர் தகவல் தொடர்புக்கு ஆதரவளிப்பதிலும் வானொலி இன்றியமையாததாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157314&ModuleId=3®=3&lang=1
***
TV/AC/PD
(Explainer ID: 160313)
आगंतुक पटल : 13
Provide suggestions / comments