• Sitemap
Rural Prosperity

தூய்மையே சேவை: மக்கள் இயக்கமாக மாறிய தூய்மைப் பணி

Posted On: 18 SEP 2026 6:50PM

மகாத்மா காந்தியின் கனவான தூய்மையே இறைத்தன்மை என்ற கொள்கையை மையமாகக் கொண்டு 2014 அக்டோபர் 2-இல் தூய்மை பாரத இயக்கம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் கழிப்பறை கட்டும் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இன்று கழிவு மேலாண்மை, மக்களின் பழக்கவழக்க மாற்றம் மற்றும் சமூகப் பங்கேற்பு கொண்ட ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

மக்களையும் அரசு அமைப்புகளையும் தூய்மைப் பணியில் ஒருங்கிணைக்கும் நோக்கில் 2017-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை தூய்மையே சேவை பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கக் காலத்தில் கழிப்பறைகள் கட்டுவதிலும் தன்னார்வத் தொண்டு செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், பின்னாளில் நெகிழி கழிவு மேலாண்மை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 2023ல் குப்பையற்ற இந்தியா, 2024ல் தூய்மையான சுபாவம், தூய்மையான பண்பாடு மற்றும் 2025ல் பண்டிகைக் காலங்களில் இயற்கை சார்ந்த தூய்மையைப் பேணும் தூய்மைத் திருவிழா என இத்திட்டத்தின் பரிணாமம் பரவலாக்கப்பட்டது.

குப்பையிலிருந்து பயனுள்ள கலைப் பொருட்கள்

தற்போது 2026ம் ஆண்டிற்கான பிரச்சாரம், தூய்மையில் பங்களிப்பு; தூய்மையான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புறக்கணிக்கப்பட்ட குப்பைக் கிடங்குகளைச் சீரமைத்தல், பள்ளி மாணவர்களுக்குத் தூய்மை அறிவுச் சுற்றுலா நடத்துதல், தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்தல், கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் குப்பையிலிருந்து பயனுள்ள கலைப் பொருட்களைத் தயாரித்தல் ஆகிய ஐந்து முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

12 கோடிக்கும் அதிகமான தனிநபர் கழிப்பறைகள்

இத்திட்டத்தின் விளைவாக கிராமப்புற இந்தியாவில் 5.69 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்ற நிலையையும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை வசதிகளையும் பெற்றுள்ளன. மேலும் நாடு முழுவதும் 12 கோடிக்கும் அதிகமான தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 95,000-க்கும் மேற்பட்ட வார்டுகளில் 100 சதவீதம் வீடுகளுக்கே சென்று கழிவுகள் சேகரிக்கப்பட்டு, உரத் தயாரிப்பு மற்றும் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மூலம் கழிவுகள் சுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்துடன், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 1 அன்று 'ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக' எனும் முழக்கத்தோடு நாடு தழுவிய தூய்மைப் பணியும், அக்டோபர் 2 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் நகர்ப்புற உள்ளாட்சிக் கூட்டங்களும் நடத்தப்படவுள்ளன. இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தூய்மையை ஒரு வெறும் கடமையாக மட்டும் பார்க்காமல், குடிமக்களின் அன்றாட நற்பழக்கமாகவும் சமூகப் பொறுப்பாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

  

  

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160036&ModuleId=3&reg=3&lang=1

***

TV/VK/PD

(Explainer ID: 160074) आगंतुक पटल : 27
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada , Malayalam