Technology
இந்தியாவில் தரவு மையங்கள்: டிஜிட்டல் யுகத்திற்கான நவீன உள்கட்டமைப்புகள்
Posted On:
14 SEP 2026 10:55AM
தரவு மையங்கள் இந்தியாவின் டிஜிட்டல் வாழ்க்கைக்கு ஆற்றலளிக்கும் கண்ணுக்குப் புலப்படாத இயந்திரங்கள் ஆகும். அவை ஒவ்வொரு நொடியும் வங்கிச் சேவை, மின்-ஆளுகை, இணையவழிச் சேவைகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் விரைவான தரவு வளர்ச்சியை ஊக்குவிப்பதால், அரசு அதற்கு ஆதரவான ஒரு கொள்கைச் சூழலமைப்பை உருவாக்கி வருகிறது. உள்கட்டமைப்பு அந்தஸ்து, நிதிச் சலுகைகள், தூய்மையான எரிசக்தி பயன்பாடு ஆகியவை இந்தியாவின் தரவு மையச் சூழலமைப்பை வலுப்படுத்துகின்றன.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், விரைவான வளர்ச்சியுடன் தொழில்நுட்ப மாற்றத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. டிஜிட்டல்மயமாக்கல், அனைத்துத் துறைகளிலும் உற்பத்தித்திறன், போட்டித்தன்மை, சேவை வழங்கல் ஆகியவற்றை மறுவடிவமைத்து வருகிறது. டிஜிட்டல் சேவைகள் விரிவடையும்போது, அவை கணினித் திறன், தரவு சேமிப்பு, அதிவேக இணைப்பு ஆகியவற்றிற்கான முன்னெப்போதும் இல்லாத தேவையை உருவாக்குகின்றன . இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், பெரிய அளவிலும் செயல்படக்கூடிய உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. தரவு மையங்கள் இந்த முக்கியமான அடித்தளத்தை வழங்குகின்றன. இவை, இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிர்வாகத்தையும் மேலும் மேலும் டிஜிட்டல் சேவைகளுக்கு மாற்றி ஆற்றலை அதிகரிக்கின்றன.

தரவு மையம் என்பது கணினி, சேமிப்பு, கட்டமைப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாதுகாப்பான வளாகமாகும். அது பெருமளவிலான டிஜிட்டல் தகவல்களைச் சேமித்து, செயலாக்கி, நிர்வகித்து, விநியோகிக்கிறது. இந்தத் திறன்கள் இணைய வங்கிச் சேவை, மின்-ஆளுகை, டிஜிட்டல் பணம் செலுத்துதல், கிளவுட் கம்ப்யூட்டிங், பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கின்றன .
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் விரிவடைந்து வருவதால், மீள்திறன் கொண்ட தரவு மையங்கள் புத்தாக்கம், போட்டித்தன்மை, நீடித்த டிஜிட்டல் வளர்ச்சிக்கான ஒரு உத்திசார் உள்கட்டமைப்பாக மாறி வருகின்றன .

ஒரு தரவு மையம் நம்பகமான மின் உள்கட்டமைப்பைச் சார்ந்துள்ளது. தரவு மையக் கணினிகள் ஒரு மில்லி விநாடிக்குக் கூட அணைந்துவிடக் கூடாது. தடையற்ற மின்வழங்கிகள், மின்சாரத் தடைகளின் போது உடனடி காப்புறுதியை வழங்குகின்றன. கணினி உபகரணங்களுக்கு ஏற்ற இயக்க நிலைமைகளைப் பராமரிக்க குளிரூட்டும் அமைப்புகள் தேவைப்படுகின்றன. வெப்பமூட்டல், காற்றோட்டம், குளிரூட்டல் அமைப்புகள், அந்த வளாகத்திற்குள் வெப்பநிலையையும் காற்றோட்டத்தையும் ஒழுங்குபடுத்துகின்றன.
தரவு மையங்களுக்கு 'உள்கட்டமைப்பு அந்தஸ்து' வழங்குவது, அவற்றை தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், மின் கட்டமைப்பு போலக் கருதி, எளிதான, மலிவான நீண்ட காலக் கடன்களைப் பெறுவதற்கான வழியை வழங்குகிறது.

2026–27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், தகுதியுள்ள வெளிநாட்டு கிளவுட் சேவை வழங்குநர்களுக்கு 2047-ம் ஆண்டு வரை வரிச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை, இந்தியாவைத் தளமாகக் கொண்ட தரவு மைய உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் உலகளாவிய செயல்பாடுகளுக்குப் பொருந்தும்.
இந்தியாவின் தரவு மைய வளர்ச்சி, ஒரு மீள்திறன் மிக்க, இறையாண்மை கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை நோக்கிய ஒரு நிலையான கொள்கைப் பயணத்தைப் பிரதிபலிக்கிறது. தரவு இறையாண்மை, டிஜிட்டல் நம்பிக்கை, பொருளாதாரப் போட்டித்தன்மை, தொழில்நுட்பத் தன்னிறைவு ஆகியவற்றிற்கு இது பெருகிய முறையில் முக்கியத்துவம் பெறுகிறது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறும்போது, தரவு மையங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு அடித்தளமாகச் செயல்படும்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=159969&ModuleId=3®=3&lang=1
***
TV/PLM/PD
(Explainer ID: 160068)
आगंतुक पटल : 11
Provide suggestions / comments