Social Welfare

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய சுகாதாரத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம்

Posted On: 30 MAR 2026 3:43PM

2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்காக, நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கு மத்திய பட்ஜெட் 2026-27-ல் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிப்பு

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த நிதியாண்டை விட 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.1,06,530.42 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட 194 சதவீதம் அதிகமாகும். இதேபோல், சுகாதாரத்துறை ஆராய்ச்சிக்கு ரூ.4,821.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீடுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்ட மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்

  • புற்றுநோய்க்கான 17 புதிய மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,00,000 துணை சுகாதாரப் பணியாளர்களுக்கும், 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஆயுர்வேத மருத்துவத்திற்கான உலகளாவிய தேவையை நிறைவு செய்ய மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் நிறுவப்படும். ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமும் தரம் உயர்த்தப்படும்.

தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் ஆயுஷ்

2025-26 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018-ல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி ரூ.9,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுஷ், தற்போதைய பட்ஜெட்டில் உலகளாவிய பொருளாதார வாய்ப்பாக மாற்றப்பட்டுள்ளது. மூலிகைப் பயிர்களை வளர்க்கும் விவசாயிகள், பதனப்படுத்தும் புத்தொழில் நிறுவனங்களை நடத்தும் இளைஞர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். வட இந்தியாவில் இரண்டாவது தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

சுகாதாரத் துறையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மனிதவளம் ஆரோக்கியமானதாக மாறும் என்றும், இது 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கின் அடிப்படைத் தூணாக அமையும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157968&ModuleId=3&reg=3&lang=1

***

PD/GS/RJ

(Explainer ID: 160009) आगंतुक पटल : 31
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Malayalam , English , Urdu , हिन्दी , Bengali , Kannada