Farmer's Welfare
நாட்டின் மீன்வளத் துறையை மேம்படுத்துதல்
நிறுவனங்கள், முதலீடு, உள்ளடக்கம்
Posted On:
06 APR 2026 12:16PM
உலகளவில் மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியா, நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற வருவாய் மேம்பாடு ஆகியவற்றில் மீன்வளத்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாகக் கடலோர, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கு வினையூக்கியாகத் திகழும் இத்துறை, ஒட்டுமொத்த வேளாண் மதிப்பு கூட்டலில் 7.43 சதவீதப் பங்களிப்பை வழங்கி, வேளாண் சார்ந்த இதர துறைகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 2013-14 நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னில் இருந்து, 2024-25 நிதியாண்டில் 197.75 லட்சம் டன்களாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் 106 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சி உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதுடன் சர்வதேச வர்த்தகச் சந்தையிலும் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
மத்திய அரசின் நிதி ஆதரவின் தொடர்ச்சியாக, 2026-27 மத்திய பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்காக இதுவரை இல்லாத அளவில் மிக அதிக அளவாக ரூ.2,761.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் பிரதான தூணாக விளங்கும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2026-27 நிதியாண்டில் மட்டும் ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வலுவான உள்கட்டமைப்பு முதலீடுகள் நவீன மீன்பிடித் துறைமுகங்கள், குளிர்பதனக் கிடங்குகள், மீன் பதப்படுத்தும் நவீன அலகுகள், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் போன்ற அதிநவீன வசதிகளை நாடெங்கும் ஏற்படுத்தி, விநியோகச் சங்கிலித் தொடரின் செயல்திறன் அடிமட்ட அளவில் வலுப்படுத்தப்படுகின்றது. இது மீன் பிடித்தலுக்குப் பிந்தைய பொருளாதார இழப்புகளைக் கணிசமாகக் குறைத்து மீனவர்களின் லாபத்தை உயர்த்த வழிவகுக்கிறது.
விளிம்புநிலை மீனவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் கீழ் இதுவரை 4.39 லட்சம் மீனவர்களுக்குக் கிசான் கடன் அட்டை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், 33 லட்சம் பயனாளிகளுக்குப் காப்பீட்டு வசதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 7.44 லட்சம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான நேரடி நிதி உதவிகள், அவசரகால மானியங்கள் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளன. மீன்வள மேம்பாட்டுடன் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, கடல்சார் கூண்டு மீன் வளர்ப்பு, மீன் குஞ்சுகள் உற்பத்தித் தொழில்நுட்பம், புதிய மீன்பிடிப் படகுகள் நவீனமயமாக்கல், ஆழ்கடல் மீன்பிடித்தல் ஆகியவற்றிலும் புதிய தொழில்முனைவோர் புத்தாக்க நடவடிக்கைகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இது பெண்களின் பங்களிப்பை சுய உதவிக்குழுக்கள் மூலம் மேம்படுத்த உதவுகிறது.
இந்திய மீன்வளத் துறையானது நிறுவன முதலீடுகள், நவீனத் தொழில்நுட்பக் கூறுகள், அனைவரையும் உள்ளடக்கிய விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய, வியத்தகு பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத் தளங்களின் நேரடி ஒருங்கிணைப்பு, எளிய கடன் விநியோகச் சீர்திருத்தங்கள் ஆகியவை இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தவிர்த்து நேரடிப் பலன்களைக் கடைக்கோடி மீனவர்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளன. உலகளாவிய நீலப் பொருளாதாரச் சந்தையில் இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்துவதோடு, நிலையான சுற்றுச்சூழல் நல்வாழ்வையும், கடலோரச் சமூகங்களின் தற்சார்புப் பொருளாதார வலிமையையும் உறுதி செய்யும் உன்னத நோக்கோடு இத்துறை புதிய இலக்குகளை நோக்கித் துரிதமாக முன்னேறி சாதனையும் படைத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158016&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 159931)
आगंतुक पटल : 15
Provide suggestions / comments