Economy
புத்தொழில் இந்தியா திட்டத்தின் பத்தாண்டு நிறைவு: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் புதிய கண்டுபிடிப்புகள்
Posted On:
15 JAN 2026 2:16PM
இந்தியாவின் தொழில்முனைவு மற்றும் புத்தாக்கச் சூழலை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘புத்தொழில் இந்தியா’ திட்டம் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று உலகிலேயே மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தொழில் தொடக்க சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியாவை உருவெடுக்க வைத்துள்ளது.
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ், 2025 டிசம்பர் நிலவரப்படி 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து உருவாகி இருப்பது, தொழில்முனைவு நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் பெண் இயக்குநர்கள் அல்லது பங்குதாரர்கள் இடம்பெற்றுள்ளது உள்ளடக்கிய சமூக வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 4 ஆக மட்டுமே இருந்த 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 'யூனிகார்ன்' நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 350 பில்லியன் டாலருக்கும் அதிகமான கூட்டு மதிப்புடன் 120-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.
தொழில் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்க புத்தொழில் இந்தியா நிதி, கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் 'மார்க்' வழிகாட்டுதல் தளம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி மற்றும் உயர்கல்வி அளவில் புத்தாக்கச் சிந்தனையை வளர்க்க 'அடல் புத்தாக்க இயக்கம்', மத்திய மின்னணுத்துறை அமைச்சகத்தின் 'ஜெனிசிஸ்', அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 'நிதி', ஊரக வளர்ச்சிக்கான 'எஸ்விஇபி' மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் ஆகியவை நாட்டின் அடிமட்ட அளவிலான தொழில்முனைவை ஊக்குவிக்கின்றன.
இந்தியாவின் இளைஞர் சக்தியையும் மின்னணு பொதுக் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை எட்டுவதில் புத்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156949&ModuleId=3®=3&lang=1
***
PD/SE/KR
(Explainer ID: 159617)
आगंतुक पटल : 19
Provide suggestions / comments