Rural Prosperity
உலகளவில், சுகாதாரத் துறையில் இந்தியாவின் மருந்தியல் துறை வளர்ச்சி கண்டு வருகிறது
Posted On:
21 MAR 2026 10:25AM
இந்திய மருந்தியல் துறை, உற்பத்தி அடிப்படையில் உலகளவில் 3-வது இடத்திலும், மதிப்பின் அடிப்படையில் 11-வது இடத்திலும் உள்ளது.
இதன் உள்நாட்டுச் சந்தை மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது 2030-ம் ஆண்டிற்குள் 130 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2025-ம் நிதியாண்டில், மருந்தியல் துறையின் ஆண்டு விற்பனை ரூ 4.72 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
2024-25-ம் ஆண்டில், 191 நாடுகளுக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்ததன் மூலம், மருந்தியல் ஏற்றுமதி மதிப்பில் இந்தியா தற்போது உலகளவில் 11-வது இடத்தில் உள்ளது.
மருந்தியல் ஏற்றுமதி மதிப்பு 30.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது 2000-01-ல் இருந்த 1.9 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில்,16 மடங்கு அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டான 2025-26-ல், அந்நிய நேரடி முதலீடாக (செப்டம்பர் வரை), ரூ. 13,193 கோடி கிடைத்துள்ளது.
2026-27-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், மொத்தம் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், இந்தியாவை உலகளவில் உயிரி-மருந்து உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதற்காக 'உயிரி மருந்து சக்தி' திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157889&ModuleId=3®=3&lang=1
***
TV/SV/PD
(Explainer ID: 159137)
आगंतुक पटल : 73
Provide suggestions / comments