Farmer's Welfare

வேளாண் துறையில் மகளிருக்கு அதிகாரமளித்தல்

Posted On: 23 MAR 2026 2:00PM

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்குப் பெரிதும் துணைபுரிகிறது. விவசாயமும், அது சார்ந்த துறைகளும்தான் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களில் 80% பேர் இந்தத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 33% பேர் விவசாயத் தொழிலாளர்களாகவும், 48% பேர் சுயதொழில் புரியும் விவசாயிகளாகவும் உள்ளனர். உலகளாவிய விவசாயத்தில் பெண்கள் வகிக்கும் மிக முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத பங்கை அங்கீகரிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டை 'சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக' (IYWF 2026) அறிவித்துள்ளது.

வேளாண் துறையில் வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியப் பெண் விவசாயிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். வளங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளை அணுகும் வாய்ப்புகளை மேம்படுத்தும் பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம், விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்  உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தலுக்கான ஒருங்கிணைந்த திட்டம், தோட்டக்கலைக்கான ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதி மற்றும் திருத்தப்பட்ட வட்டி மானியத் திட்டம்  போன்ற திட்டங்கள், மானியங்கள், வட்டிச் சலுகைகள் மற்றும் நேரடி வருமானப் பரிமாற்றங்கள் மூலம் பெண் விவசாயிகளுக்கு நிதி ஆதரவையும் கடன் வசதிகளையும் வழங்குகின்றன. மேலும், நமோ ட்ரோன் சகோதரி திட்டம், தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம்  மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற முன்முயற்சிகள், தொழில்நுட்பப் பயன்பாடு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரப் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களின் பங்கேற்பை வலுப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சந்தை இணைப்புகளை வலுப்படுத்துவதுடன், அறுவடைக்குப் பிந்தைய திறமையான மேலாண்மைக்கு ஆதரவளிப்பதன் மூலம் வேளாண் மதிப்புச் சங்கிலியில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கின்றன.

வேளாண் துறையில் பெண்களின் பங்கேற்பை வலுப்படுத்த, பயிற்சி, ஆராய்ச்சி ஆதரவு, கொள்கை வழிகாட்டுதல் மற்றும் கள அளவில் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்கும் வலுவான நிறுவனங்களின் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், வேளாண் துறையில் தேசிய பாலின வள மையம், புவனேஸ்வரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)-பெண்களுக்கான மத்திய வேளாண்மை நிறுவனம், மற்றும்

வேளாண் இயந்திரங்கள் பயிற்சி மற்றும் சோதனை நிறுவனங்கள் ஆகியவை, பெண் விவசாயிகளுக்குத் தேவையான ஞானம், திறன்கள் மற்றும் பாலின உணர்திறன் கொண்ட ஆதரவு அமைப்புகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

வேளாண் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மிக அவசியம். பாலின உணர்திறன் கொண்ட திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள், பெண்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆதரவு போன்ற இலக்கு சார்ந்த நடவடிக்கைகள், கடின உழைப்பைக் குறைப்பதிலும், வருமானத்தை அதிகரிப்பதிலும், மதிப்புச் சங்கிலி முழுவதும் பெண்கள் தலைவர்களாகத் திகழ்வதை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு 2026-ன் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க வேளாண் துறையில் பெண்களின் திறன்கள், அங்கீகாரம் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவது, கிராமப்புற வாழ்வாதாரங்களையும், மீள்தன்மையையும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157897&ModuleId=3&reg=3&lang=1

***

TV/BR/PD

(Explainer ID: 159136) आगंतुक पटल : 93
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada , Malayalam