Infrastructure
அஷ்டலட்சுமி – நாட்டின் முன்னேற்றத்திற்கான மையமாகத் திகழும் வடகிழக்கு மாநிலங்கள்
Posted On:
20 JUN 2026 8:53AM
உயர்ந்த மலைகள் மேகங்களைத் தொடும் இயற்கை அழகு கொண்ட இடமாகவும், நதிகளின் நீரோட்டத்தில் எழும் ஓசைகளுடன், இசை, கலை, இலக்கியத்திற்கு உத்வேகம் அளிக்கும் இடமாகவும் திகழும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. எட்டு தனித்துவ மாநிலங்களைக் கொண்ட இப்பகுதி, ஒட்டுமொத்தமாக "அஷ்டலட்சுமி" என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பாரம்பரியத்தில், லட்சுமி தேவி மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளமை, நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக விளங்குகிறார். வளமையின் வெவ்வேறு அம்சங்கள் அல்லது ஆதாரங்களைக் குறிக்கும் எட்டு வெவ்வேறு வடிவங்கள் அல்லது வெளிப்பாடுகளைக் கொண்டவராக அவர் அறியப்படுகிறார். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக இணைத்து அஷ்டலட்சுமி என்று அழைக்கப்படுகின்றன. அதே உணர்வுடன், வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களில் ஒவ்வொன்றும் அதன் தனித்துவ வளமையையும், பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளன. அவை அனைத்தும் ஒன்றிணைந்து, நாட்டின் வளர்ச்சி, நல்வாழ்விற்கான முக்கிய ஆதாரமான "அஷ்டலட்சுமி" எனக் கருதப்படுகிறது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்கள் ஒன்றிணைந்து, இந்தப் பகுதியை உற்சாகம் மிகுந்த மண்டலமாக உருவாக்குகின்றன. அவற்றின் அமைவிடம், வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவை வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆதார மையமாக உருவெடுக்கச் செய்கின்றன.
கடந்த 12 ஆண்டுகளில், இந்தப் பரந்து விரிந்துள்ள பகுதியில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளது. ஒரு காலத்தில் தொலைதூராப் பகுதியாக வரையறுக்கப்பட்டிருந்த நிலப்பகுதி, தற்போது, அனைவரும் எளிதில் செல்லக்கூடிய வகையில், போக்குவரத்து , தகவல் தொடர்பிற்கான இணைப்பு வசதிகள், விரிவடைந்து வரும் வாய்ப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள், ரயில் பாதைகள் எனப் போக்குவரத்து வசதிகள் விரிவடைந்து வருகின்றன. மேலும் விமான நிலையங்களும், நீர்வழிப் போக்குவரத்தும், புதிய பாதைகளுக்கு வழி வகுக்கின்றன. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள், நீர், வீட்டுவசதி, சுகாதாரம், எரிசத்தி, உடல்நலம், கல்வி போன்ற அம்சங்களில் சிறந்த வாய்ப்புக்களைக் கொண்டு வந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் செலுத்தப்பட்டு வரும் கவனம், வலுவான சந்தைகளுடனான இணைப்புகள் மூலம், விவசாயமும் கிராமப்புற வாழ்வாதாரங்களும், விரைவான வளர்ச்சி கண்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உள்ளூர் மக்களின் யதார்த்த வாழ்வியல் முறைகளில் நன்கு வேரூன்றியுள்ளதாகவும் மாறியுள்ளது.
2014 முதல், மத்திய அரசின் நீடித்த கொள்கை மூலம் வழிநடத்தப்படும் இந்த வளர்ச்சித் திட்டப் பணிகள், தெளிவான, சமநிலையான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. வளர்ச்சிக்கான சூழலியல் உணர்திறன், வளத் திறன், நீண்டகால நிலைத்தன்மையுடன் இணைக்க உதவுகிறது. இன்று அஷ்டலட்சுமி என அழைக்கப்படும் எட்டு வடகிழக்கு மாநிலங்களில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான செயல்திட்டங்களின் மையமாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158959&ModuleId=3®=3&lang=1
****
TV/SV/KR
(Explainer ID: 159019)
आगंतुक पटल : 61
Provide suggestions / comments