Economy
அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்: கிராமங்கள், புறநகர்ப்பகுதிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல்
Posted On:
14 MAY 2026 11:47AM
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் உந்துசக்தியாக விளங்கி வருகின்றன. அவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31%-க்கும் அதிகமாகவும், ஏற்றுமதியில் 48.58%-ஆகவும் பங்களிப்பதோடு, நாடு முழுவதும் உள்ள சுமார் 32.8 கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கின்றன. பதிவு செய்யப்படாத நிறுவனங்களை முறைப்படுத்துவதை உத்யம், உத்யம் அசிஸ்ட் தளங்கள் மூலம் அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதன் மூலம் 7.9 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் முறைசார்ந்த பொருளாதாரத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தி வருகின்றன; அத்துடன் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை வலுப்படுத்தி, தொழில் செய்வதை எளிதாக்குகின்றன. ஜெம், டிஆர்இடிஎஸ், சமாதான் போன்ற டிஜிட்டல் தளங்கள் சிறந்த சந்தை வாய்ப்புகளையும் விரைவான கட்டணப் பரிமாற்றங்களையும் சாத்தியமாக்குகின்றன. இத்தகைய கூட்டு முயற்சிகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதுடன், கிராமப்புற மற்றும் பகுதி-நகர்ப்புற இந்தியாவெங்கும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.
உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:
இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை தொழில்முனைவோரை ஊக்குவிக்கின்றன, வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன, மேலும் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை ஆதரிக்கின்றன. கிராமப்புற மற்றும் பகுதி-நகர்ப்புற பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக மிக முக்கியமானவை ஆகும். இதைக் கருத்தில் கொண்டு, இந்தத் துறைக்காக அரசு கொள்கைசார்ந்த பல முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சிகள் நிதிப் பயன்பாட்டை மேம்படுத்துவதையும், முறைப்படுத்துதலை ஊக்குவிப்பதையும், சந்தை இணைப்புகளை வலுப்படுத்துவதையும், சிறு நிறுவனங்களின் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நடவடிக்கைகள் உள்ளூர் உற்பத்தி அமைப்புகளை வலுப்படுத்துவதையும், சுயவேலைவாய்ப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், இவை பாரம்பரியக் கைவினைப் பொருட்களுக்கும், கிராமப்புறத் தொழில்களுக்கும் ஆதரவளித்து, உள்ளடக்கிய, சமத்துவமான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
தற்சார்பு இந்தியா தொகுப்பு:
தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக, எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் முதலீட்டு நிதியங்களில் முக்கிய பங்கினை வைத்துக்கொள்வதன்) மூலம் ரூ.50,000 கோடி பங்கு உட்செலுத்துதல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு இணங்க, வளர்ந்து பெரிய அலகுகளாக மாறும் திறனையும் சாத்தியக்கூறுகளையும் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ரூ. 50,000 கோடியை சமபங்கு நிதியாக வழங்குவதற்காக தற்சார்பு இந்தியா (எஸ்.ஆர்.ஐ) நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 50,000 கோடி மதிப்பிலான இந்த நிதியத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து ரூ.10,000 கோடியும், தனியார் பங்கு / தொழில் மூலதன நிதிகள் மூலம் ரூ.40,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, எம்.எஸ்.எம்.இ.க்கான திருத்தப்பட்ட நிதியின் கீழ் மொத்த பங்கு உட்செலுத்துதல் ரூ.4,885 கோடியை எட்டியது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.529.40 கோடியும் அடங்கும்.
எம்.எஸ்.எம்.இ துறைக்காக மத்திய அரசு பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, அவற்றுள் பின்வருவன அடங்கும்:
எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான சாம்பியன்ஸ் 2.0 போர்ட்டல் 27.06.2023 அன்று தொடங்கப்பட்டது; இது, பின்வருவனவற்றை உள்ளடக்கியது
எம்.எஸ்.எம்.இ- நீடித்த தன்மைகொண்டது
எம்.எஸ்.எம்.இ- போட்டி (லீன்) மற்றும்
எம்.எஸ்.எம்.இ- புதுமை கண்டுபிடிப்பு (புதியது, ஐ.பி.ஆர், வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ) இது எம்.எஸ்.எம்.இ.க்கு நிதி உதவி வழங்குகிறது;
2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையின் தொகு நிதியில் ரூ.9,000 கோடி உட்செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
"எம்.எஸ்.எம்.இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரைவுபடுத்துதல்", இது மத்தியிலும் மாநிலங்களிலும் எம்.எஸ்.எம்.இ திட்டத்தின் நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் எம்.எஸ்.எம்.இ துறையின் கடன் மற்றும் சந்தைக்கான அணுகலை அதிகரிப்பது, தொழில்நுட்ப மேம்பாடு மூலம் உறுதியான திறன்களை அதிகரிப்பது, தாமதமான கொடுப்பனவுகளின் நிகழ்வுகளைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158608&ModuleId=3®=3&lang=1
***
PD
(Explainer ID: 158930)
आगंतुक पटल : 106
Provide suggestions / comments