Farmer's Welfare
நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
Posted On:
09 MAY 2026 11:22AM
இந்தியாவின் மொத்த சாகுபடி பரப்பில் சுமார் 60 சதவீதத்த்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மானாவாரி விவசாயம், நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமாக விளங்குவதுடன், ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் தோராயமாக 40 சதவீதப் பங்களிப்பை அளித்து வருகிறது. உணவு தானியங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை, மீள்தன்மை கொண்ட மானாவாரி விவசாய முறைகளின் முறையான மேம்பாடு ஆகியவை அவசியமாகிறது. இச்சூழலில், காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் கீழ், 2014-15-ம் ஆண்டில் நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம் தொடங்கப்பட்டது. காலநிலை மாறுபாடுகளால் விவசாயத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளைத் குறைத்து, உணவு, வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த நடவடிக்கையாக இந்த இயக்கம் திட்டமிடப்பட்டது.
அதன்பின்னர், 2018-19 முதல், பசுமைப் புரட்சி - கிரிஷோன்னதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒரு துணை இயக்கமாக இது செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2022-23 முதல் மேற்கொள்ளப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, இத்திட்டம் பிரதமரின் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது நிலையான, காலநிலை மீள்தன்மை கொண்ட விவசாய மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் காலநிலை மீள்தன்மை கொண்ட விவசாயத்தை ஊக்குவிக்கிறது. நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பது, மண்வளத்தை மேம்படுத்துவது, காலநிலை மீள்தன்மை கொண்ட விவசாயத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் நிலையான விவசாய மேம்பாட்டிற்கு இது வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. பன்முகத்தன்மை கொண்ட, இடர்களைத் தாங்கக்கூடிய விவசாயத்திற்காக ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை ஊக்குவிக்கும் மானாவாரிப் பகுதி மேம்பாட்டுக் கூறு, நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த நுண்பாசனத்தை ஊக்குவிக்கும் "ஒரு துளி நீரில் அதிக விளைச்சல்" முன்முயற்சி ஆகியவை இதன்கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். இந்த முயற்சிகள் மண்வள அட்டைத் திட்டத்தின் ஆதரவுடனான மண்வள மேலாண்மைக் கூறின் மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. இது சீரான ஊட்டச்சத்து பயன்பாட்டை ஊக்குவித்து, நீண்ட காலத்திற்கு மண்வளத்தை பாதுகாக்கிறது.
மானாவாரிப் பகுதி மேம்பாடு: நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், 2014-15 முதல் மானாவாரிப் பகுதி மேம்பாட்டுக் கூறு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட, அந்தந்த விவசாயக் காலநிலை மண்டலங்களுக்கு உகந்த ஒருங்கிணைந்த பண்ணை முறை மாதிரிகள் மூலம் நிலையான விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயிகளின் வருவாயையும் மீள்தன்மையையும் அதிகரிக்க, பலபயிர் சாகுபடி, சுழற்சி முறைப் பயிர் சாகுபடி, ஊடுபயிர், கலப்புப் பயிர் முறைகளுடன் தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளை இணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை இது ஊக்குவிக்கிறது.
மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப இந்திய வேளாண்மையை மேலும் நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதற்கான உத்திகளை உருவாக்கி செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தில் உள்ள இயக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து தானியங்களுக்கான துணை இயக்கம் ஒன்றை 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மையில் தேசிய கண்டுபிடிப்புகள் என்ற முதன்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயிர்கள், கால்நடைகள், தோட்டக்கலை மற்றும் மீன்வளம் உள்ளிட்டவற்றில் விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வதும், விவசாயத்தில் பருவநிலை நெகிழ்திறன் தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158495&ModuleId=3®=3&lang=1
***
PD
(Explainer ID: 158927)
आगंतुक पटल : 93
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam