Social Welfare

இந்தியாவின் ஓய்வூதியக் கட்டமைப்பு

Posted On: 07 MAY 2026 5:23PM

இந்தியாவில் ஓய்வூதிய பலன்களை அளிக்கும் பல்வேறு திட்டங்களிலிருந்து அதன் பல்வகைப்பட்ட பங்களிப்புடன் கூடிய கட்டமைப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நிதி மேம்பாடு, நிலைத்தன்மை, பகிரப்பட்ட பொறுப்புணர்வு மற்றும் நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 2.17 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் மார்ச் 31 அன்றைய நிலவரப்படி 8.96 கோடி பதிவுகளும் உள்ளன. பெருமளவிலான சொத்து உருவாக்க நடவடிக்கைகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த ஓய்வூதியத் திட்டங்கள் பயனளிக்கின்றன.

நாட்டின் ஓய்வூதியக் கட்டமைப்பு தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.51.4 ஆயிரம் கோடியாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அதன் ஓய்வூதிய கட்டமைப்புகளும் டிஜிட்டல் முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வலுவான நிர்வாக அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் ஆயுள்காலம், பெருகி வரும் பன்முக வேலைவாய்ப்பு போன்றவை காரணமாக ஓய்வூதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மிக முக்கியமான கொள்கையாக மாறியுள்ளது. இந்த நிலையில் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவின் ஓய்வூதியக் கட்டமைப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்பு அரசு ஊழியர்களுக்கான வரையறைக்கப்பட்ட பணப்பலன் அளிக்கும் ஏற்பாடாக இருந்த இந்த ஓய்வூதியத் திட்டம் தற்போது அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் விரிவான கட்டமைப்பாக அமைந்துள்ளது.

சந்தாதாரர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கான இலக்கு சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. டிஜிட்டல் தளங்கள் வாயிலாக சமூகப் பாதுகாப்பிற்கான அமைப்பு முறைகளை விரிவுபடுத்துவதிலும் சேவை வழங்குதலை மேம்படுத்துவதிலும் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்புத் துறை ஓய்வூதிய நிர்வாகத்திற்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமான 'ஸ்பார்ஷ்' , நவம்பர் 2025 நிலவரப்படி 31.69 லட்சம் ஓய்வூதியதாரர்களை இணைத்துள்ளது. இது 45,000-க்கும் மேற்பட்ட முகவர் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட பழைய அமைப்பை மாற்றி, ஒரு ஒருங்கிணைந்த, வெளிப்படையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது.

சாதனைகள்: பழைய அமைப்பிலிருந்து மாற்றப்பட்ட 6.43 லட்சம் முரண்பாடு வழக்குகளில், 94.3% (6.07 லட்சம்) தீர்க்கப்பட்டுள்ளன.

குறைகள் தீர்வு: ஆன்லைன் மூலம் குறைகளைக் களைய முடியும் என்பதால், குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி நேரம் 56 நாட்களிலிருந்து 17 நாட்களாகக் குறைந்துள்ளது.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் : டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் 4.0 பிரச்சாரத்தில், பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு 20.94 லட்சம் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நிதி விநியோகம்: 2024-25 நிதியாண்டில் ரூ. 1,57,681 கோடி ஓய்வூதியம் 'ஸ்பார்ஷ்' மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், 20.17 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 1,224.76 கோடி 15 நாட்களில் விநியோகிக்கப்பட்டது.

இந்தத் தளம், வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கண்ணியத்தையும், சரியான நேரத்தில் ஆதரவையும் உறுதி செய்கிறது.

யுபிஎஸ்- எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1) உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

2) உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் உயிரிழந்து விட்டால், அவருக்குக், கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும்.

3) உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: 10 ஆண்டுகள் பணி செய்வதவருக்கு குறைந்த ஓய்வூதியமாக ஓய்வுக்காலத்திற்குப் பிறகு மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

4) பணவீக்கக் குறியீடு: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவற்றின் மீது பணவீக்க குறியீடு

சேவைப் பணியாளர்களைப் போலவே தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி நிவாரணம்

5) பணிக்கொடையுடன், கூடுதலாக ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் தொகை

நிறைவடைந்த ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் ஓய்வு பெறும் நாளன்று மாதாந்திர ஊதியத்தில் 1/10 பங்கு (ஊதியம் + டிஏ)

இந்த பரிவர்த்தணை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தின் அளவைக் குறைக்காது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158466&ModuleId=3&reg=3&lang=1

***

TV/SV/VK/PLM/PD

(Explainer ID: 158924) आगंतुक पटल : 93
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Gujarati , Kannada , Malayalam