• Sitemap
  • Advance Search
Industries

தற்சார்பை நோக்கி முன்னேறி வரும் இந்தியாவின் எஃகு துறை

Posted On: 05 MAY 2026 3:51PM

கடந்த 2018-ம் ஆண்டில் உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உருவெடுத்ததில் இருந்து, இந்த நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த 12 ஆண்டுகளில் எஃகு நுகர்வு இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. தேவை உயர்ந்ததால், ஏற்றுமதி அதிகரித்த அதே வேளையில் இறக்குமதி குறைந்தது, இது தற்சார்பை மேம்படுத்தியது. இந்த வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, மத்திய அரசு மூலப்பொருட்களின் கிடைப்புத்தன்மையை உறுதி செய்ததுடன் உற்பத்திச் செலவையும் குறைத்தது. இது இந்திய எஃகு உற்பத்தியாளர்களுக்கான உலகளாவிய சந்தைகளின் அணுகலையும் மேம்படுத்தியது. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ₹23,022 கோடி முதலீடு சிறப்பு எஃகு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளித்தது. இதன் விளைவாக 2.4 மில்லியன் டன் உற்பத்தியும், 13,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளும் உருவாயின. தேசிய எஃகு கொள்கையின் உற்பத்தி இலக்கில் சுமார் 66 விழுக்காட்டை இந்தியா எட்டியுள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது, பசுமை எஃகு கார்பன் தடயங்களைக் குறைப்பதற்காக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்து உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இத்துறையில் கார்பன் உமிழ்வை முழுமையாகக் கட்டுப்படுத்தி, வரும் 2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இந்தியா உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

ஆண்டு

உலக கச்சா எஃகு உற்பத்தி (Mt)

இந்தியா கச்சா எஃகு உற்பத்தி (Mt)

2017

1739

102

2018

1831

109

2019

1880

111

2020

1885

100

2021

1963

118

2022

1890

125

2023

1892

141

ஆதாரம்: உலக எஃகு சங்கம், Mt=மில்லியன் டன்

எஃகு ஒரு ஒழுங்குபடுத்தப்படாத துறை. எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசு வசதி செய்து தரும் அமைப்பாக செயல்படுகிறது. நாட்டில் உருக்கு உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எஃகு தொழிலில் கார்பன் குறைப்பை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

1. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2010 ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய சூரிய இயக்கம், சூரிய சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் எஃகு தொழில்துறையின் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட எரிசக்தி திறனுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்பாடு, சாதனை மற்றும் வர்த்தகம் திட்டம், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க எஃகு தொழிலை ஊக்குவிக்கிறது.

நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டங்களில், உலகளவில் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பங்களை எஃகுத் துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

எரிசக்தி திறன் மேம்பாட்டுக்கான ஜப்பானின் புதிய எரிசக்தி மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மாதிரி திட்டங்கள் எஃகு ஆலைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158442&ModuleId=3&reg=3&lang=1

 

***

PKV/PD

(Explainer ID: 158923) आगंतुक पटल : 99
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Malayalam