Social Welfare
இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவின் வளர்ச்சி
Posted On:
02 MAY 2026 10:10AM
மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மற்றும் தயாரிப்புகளின் மேம்பாடு சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு முன்முயற்சிகள் மூலம் மருத்துவம் மற்றும் நலவாழ்வு சுற்றுலா உட்பட பல்வேறு சுற்றுலா வகைகளை சுற்றுலா அமைச்சகம் ஊக்குவிக்கிறது.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகை தரும் வெளிநாட்டவரின் வசதிக்காக இ-மருத்துவ விசா மற்றும் இ-மருத்துவ உதவியாளர் விசா வசதியை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்கள், நலவாழ்வு மையங்கள், விசா, சுகாதார பராமரிப்பாளர்கள் குறித்த தகவல்களை http://www.indiahealthcaretourism.com என்ற இணையதளம் மூலம் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள சேவை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம் அளித்து வருகிறது.
மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்தியச் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 1,31,856 வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மருத்துவச் சுற்றுலா உட்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், விமான சேவைகள், வர்த்தக முகமைகள், சேவை வழங்குநர்கள், ஒழுங்கு முறை முகமைகள் போன்ற பல்வேறு துறைகளின் மூலம் உகந்த சூழல் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மின்னணு மருத்துவ விசா 171 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்துள்ளார்.
2026-27 நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தமிழநாட்டில் பழவேற்காடு ஏரி, மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்த பொதிகை மலை உள்ளிட்ட சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ஆற்றிய பட்ஜெட் உரையில், “மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த, மண்டல அளவில் 5 மருத்துவ மையங்கள் அமைக்க மாநிலங்களுக்கு உதவும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது” என்றார். மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ வளாகங்களாக இந்த மையங்கள் விளங்கும். ஆயுஷ் மையங்கள், மதிப்புமிக்க மருத்துவ சுற்றுலா மையங்கள், நோய் கண்டறிதல் வசதிகள், சிகிச்சைக்கு பிறகான மறுவாழ்வு வசதிகள் ஆகியவையும் இந்த மருத்துவ மையங்களில் இடம்பெறும்.
தற்போது செயல்பாட்டில் உள்ள தேசிய உணவு விடுதி மேலாண்மை மற்றும் சமையல்கலை தொழில்நுட்பக் கழகத்தை மேம்படுத்தி தேசிய விருந்தோம்பல் நிறுவனமாக மேம்படுத்தபடும். உயர்தரத்திலான 12 வாரப் பயிற்சித் திட்டம் மூலம் 20 முக்கிய சுற்றுலாத் தலங்களில் உள்ள 10,000 வழிகாட்டிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசத்தில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்வையிடும் வசதிகள் ஏற்படுத்துதல், மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை உள்ளிட்ட சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா உருவாக்கிய சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டை இந்த ஆண்டு இந்தியா நடத்த உள்ளது என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில், பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள புத்த மதச்சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.
மருத்துவ சுற்றுலா சேவைகளுக்கான முக்கிய பகுதியாக இந்தியாவை திகழச்செய்யும் வகையில், தனியார்துறை கூட்டாண்மையுடன் 5 பிராந்திய மருத்துவ மையங்களை அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மையங்கள் மருத்து சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பு வளாகங்களாக இயங்கும்.
தரமான கல்வி, சிகிச்சை பாராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியை விரிவுப்படுத்த புதிதாக 3 அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் உலகளாவிய விழிப்புணர்வுக்கு ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் புதுப்பிக்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158426&ModuleId=3®=3&lang=1
***
SV/PD
(Explainer ID: 158922)
आगंतुक पटल : 19
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam