• Sitemap
  • Advance Search
Farmer's Welfare

இந்திய விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல்

Posted On: 05 JUN 2026 11:24AM

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயத்துறை பல்வேறு மற்றங்களைக் கண்டுள்ளது. உற்பத்தித் திறன், வருமான ஆதரவு, இடர் மேலாண்மை, பன்முகப்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயம், அது சார்ந்த துறைகளின் மொத்த மதிப்பு 2014-15-ம் நிதியாண்டில் 20.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 2023-24-ம் நிதியாண்டில் 48.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் 357.73 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதனப்படுத்துதல் போன்ற துறைகளும் விரிவடைந்துள்ளன.

விவசாயிகளின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் கொள்கைகள் நலத்திட்ட உதவிகளுடன் நின்றுவிடாமல் உற்பத்தித் திறன், வருமானப் பாதுகாப்பு, சந்தை அணுகல், உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கியும் விரிவடைந்துள்ளன. பாசன வசதி விரிவாக்கம், கடன் வசதிகள், விரிவான பயிர் காப்பீடு போன்றவை இந்த மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை முறையானது உற்பத்திச் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது. டிஜிட்டல் தளங்கள், கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாய நடவடிக்கைகளில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நிதிநிலை ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14-ல் 27,663 கோடி ரூபாயாக இருந்தது, 2026-27 நிதியாண்டில் 1,40,528.78 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதித் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளில் நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 22 தவணைகளாக 4.28 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி விடுவிக்கப்பட்டு, நாடு முழுவதும் 9.44 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகள் பெண் விவசாயிகள் ஆவர்.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் 2016-17 முதல் 92.46 கோடி காப்பீடுகள் மேள்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 24.31 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் 1.96 லட்சம் கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க 'கிருஷ் ரக்ஷக்' இணையதளம், உதவி எண் ‘14447’ ஆகியவை செயல்பாட்டில் உள்ளன.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கிறது. அதே வேளையில், இந்தச் சிறப்புமிக்க திட்டங்கள் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திறன் கொண்டதாகவும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், சுற்றுச்சூழல் சமநிலை மாறாத நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யக்கூடியதாகவும் விளங்கும் ஒரு மேம்பட்ட வேளாண் துறைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158774&ModuleId=3&reg=3&lang=1

***

SS/PD

(Explainer ID: 158854) आगंतुक पटल : 71
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam