Social Welfare
வளர்ச்சித் திட்டப் பயனாளிகளிலிருந்து தேசத்தை வழிநடத்தும் சக்தியாகப் பெண்கள்
Posted On:
02 JUN 2026 3:35PM
கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், இந்தியா 'பெண்கள் நலன்' என்ற நிலையிலிருந்து 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்ற இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. பெண்களின் வாழ்நாள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் தலைமைப் பண்புகளில் அவர்களின் பங்களிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளன.
பாதுகாப்பான மகப்பேறு மற்றும் நல்வாழ்வு:
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: பாலினத் தேர்வைத் தடுத்து, பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும் திட்டம் ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என அதிகரித்துள்ளது.
மகப்பேறு உதவி: கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ் 4.92 கோடிக்கும் அதிகமான பெண்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20,150 கோடி நிதியுதவி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாடு: இலவச மருத்துவமனைப் பிரசவங்களை ஊக்குவிக்கும் திட்டங்களால் பிரசவங்கள் 90.6%-ஆக உயர்ந்து, மகப்பேறு இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
கல்வி, திறன் மற்றும் தொழில்நுட்பம்:
பள்ளி உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதால் பெண் குழந்தைகளின் சேர்க்கை 48%-ஆக உயர்ந்துள்ளது. பின்தங்கிய எளிய பெண் குழந்தைகளுக்கான குடியிருப்புப் பள்ளிகள் அவர்களின் தொடர் கல்விக்கு பெரிதும் உதவுகின்றன.
மேலும், சிறப்பு வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் பங்கேற்பு 20%-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. தேசியத் திறன் மேம்பாட்டுத் திட்டப் பயனாளிகளிலும் 45% பேர் பெண்கள் ஆவர்.
பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு
சுயஉதவிக் குழுக்கள்: நாடு முழுவதும் 10.07 கோடி உறுப்பினர்களைக் கொண்ட 93.85 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஊரகப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. 6 கோடி பெண்களை ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டும் 'லட்சாதிபதி சகோதரிகளாக' மாற்றுவதே இதன் இலக்காகும்.
தொழில்முனைவு: பிணையில்லா முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.40.07 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டதில் பெண்கள் பெரும் பயனடைந்துள்ளனர். நவீன ட்ரோன் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயத்திலும் பெண்கள் புதிய வருவாய் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
கண்ணியமான வாழ்க்கை: 24 மணி நேர உதவி எண்கள், 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகள், 10.55 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் மற்றும் தூய்மையான குடிநீர் குழாய் இணைப்புகள் பெண்களின் பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளன.
அரசியல் மற்றும் நிறுவனத் தலைமை:
உள்ளாட்சி அமைப்புகளில் 14.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண் கடெட்டுகள் சேர்க்கப்படுவது போன்ற வரலாற்று மாற்றங்கள், 2047 'வளர்ச்சியடைந்த இந்தியா' இலக்கை நோக்கிப் பெண்கள் முன்னின்று வழிநடத்துவதை வெளிப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158738&ModuleId=3®=3&lang=1
***
TV/EA/KR
(Explainer ID: 158747)
आगंतुक पटल : 14
Provide suggestions / comments