சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் சென்னையில் நாளை தொடங்குகின்றன
प्रविष्टि तिथि:
21 APR 2024 7:14PM by PIB Chennai
விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டி நிகழ்வுகள் சென்னையில் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நாளை முதல் வரும் 27ந்தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்துகிறது. நாளை காலை 9 மணியளவில், ஒலிம்பிக் போட்டியாளரும், பத்மஶ்ரீ விருதாளருமான திருமதி சைனி வில்சன் தலைமை விருந்தினராக இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
நாளை தடகளம், 23ந்தேதி குத்துச்சண்டை, 24ந்தேதி வாலிபால், 25ந்தேதி கால்பந்து, 26ந்தேதி கபடி, 27ந்தேதி கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறன் பெற்றவர்களைத் தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெறும். 23ந்தேதி முதல் 27ந்தேதி வரை காலை 7 மணி முதல் விளையாட்டுகள் தொடங்கும்.
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை இளம் வீரர்கள் வெளிப்படுத்தி, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு http://mybharat.gov.in/ என்ற தளத்தை அணுகவும்.
***
AD/PKV/DL
(रिलीज़ आईडी: 2018389)
आगंतुक पटल : 73