சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய நிதியுதவியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
06 FEB 2024 5:41PM by PIB Chennai
தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று உறுப்பினர் திரு கே சண்முகசுந்தரம், திரு விஷ்ணு தயாள் ராம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராமத்துறை இணையமைச்சர் திரு சாத்வி நிரஞ்சன் ஜோதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் 3,36,044 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 40,02,881 பேர் இடம் பெற்றுள்ளனர்.
2014-15 முதல் 2024 ஜனவரி 31-ந் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ரூ.1871.65 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.1835.95 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்கும் சேர்ந்து ரூ.3354.80 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
***
PKV/BS/AG/RR
(रिलीज़ आईडी: 2003152)
आगंतुक पटल : 59