• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கடந்த 3-ந் தேதி வரை தமிழ்நாட்டில் 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 06 FEB 2024 5:20PM by PIB Chennai

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டு முதல் கடந்த 3-ந் தேதி வரை 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களவையில் உறுப்பினர்கள் திரு செந்தில்குமார், திரு அண்ணாதுரை, திரு செல்வம், திருமதி சுப்ரியா சுலே, டாக்டர் அமோல் ராம்சிங் கோல்ஹே, டாக்டர் சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, திரு குல்தீப் ராய் சர்மா ஆகியோர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராம வளர்ச்சித்துறை இணையமைச்சர் திரு சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி என்ற நோக்கத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016 ஏப்ரல் 9-ந் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் 2024 மார்ச் மாதத்திற்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி உறுதியான வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த இலக்கில் 2.94 கோடி வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இதில் பிப்ரவரி 3-ந் தேதி வரை 2.55 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு ரூ.3010 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்குத் தொகையுடன் சேர்த்து இதுவரை ரூ.3630 கோடிக்கும் அதிகமான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரி 3-ம் தேதி வரை தமிழ்நாட்டின் 7,51,421 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் 900 பயனாளிகளுக்கு இன்னும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

***

PKV/BS/AG/RR



(Release ID: 2003127) Visitor Counter : 41


Link mygov.in