சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பெரம்பலூர் மாவட்டம் குரூர் ஊராட்சியில் நமது லட்சம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் கீழ் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
प्रविष्टि तिथि:
30 DEC 2023 9:25PM by PIB Chennai
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குரூர் ஊராட்சியில் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மத்திய அரசின் நமது லட்சம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் கீழ் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
யாத்திரை வாகனத்தின் வீடியோ படக்காட்சி மூலம், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் , பயிர்காப்பீடு திட்டம், மண் பரிசோதனை, காளான் மற்றும் தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்ந்த பண்ணையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் குறைந்த செலவில், குறுகிய கால அளவில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல், நானோ யூரியா தெளித்தல் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறி விளக்கமளித்தனர்.
இதனைப் பார்வையிட்டு பயனடைந்த விவசாயிகள் யாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் முறை குறித்து தெரிந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தங்களுக்குப் பயன் அளிப்பதாகக் கூறிய விவசாயிகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.


***
(रिलीज़ आईडी: 1991842)
आगंतुक पटल : 61