• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் முக்கிய நோக்கம்: சிவகங்கை மாவட்டத்தில் யாத்திரையில் பங்கேற்ற மத்திய மின் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் பேட்டி


கன்னியாகுமரியில் நடைபெற்ற யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திரு வி.கே. சிங் பங்கேற்று 3 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உவிகளை வழங்கினார்

Posted On: 16 DEC 2023 7:55PM by PIB Chennai

மத்திய அரசுத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் முக்கிய நோக்கம் என மத்திய மின் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

 

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் ஓக்கூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் தலைமையில் கலந்துகொண்டு 1.8 கோடி மதிப்புள்ள பல்வேறு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    

அதைத் தொடர்ந்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. பின்னர் பிரதமரின் காணொலி உரை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என்றார். இதுபோன்ற திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார். இத்திட்டங்கள் மக்களை எந்த அளவு சென்றடைந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளவும் அவற்றின் பலன்களை முழுமையாக மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த யாத்திரை நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று மக்களைச் சந்திப்பதாக திரு ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

    

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தெள்ளாந்தி கிராமத்தில் நடைபெற்ற யாத்திரையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு வி.கே. சிங் பங்கேற்றார். 3 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 48 பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியின்போது வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான உறுதி மொழி ஏற்கப்பட்டதுடன் மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியின்போது விளக்கப்பட்டது. அரசுத் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களையும் அமைச்சர் மக்களுக்கு விநியோகித்தார்.  இந்த யாத்திரையின்போது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பிரதமரின் ஸ்வநிதி, முத்ரா வங்கிக் கடன், மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயன் அடைந்தவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரதமரின் காணொலிக் காட்சி மூலமான உரையும் இந்த நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்டது.

    

அரசுத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்த அவர், ஏற்கெனவே மத்திய அரசுத் திட்டங்களின் மூலம் பயன் அடைந்தவர்களின் அனுபவங்களையும் இணையமைச்சர் கேட்டறிந்தார். பிரதமரின் காணொலி மூலமான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இந்நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

    

----------


SM/AD/PLM/DL


(Release ID: 1987245) Visitor Counter : 44


Link mygov.in