• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோவில் "விண்வெளி தரநிலைகள்" குறித்த கலந்துரையாடலை இந்திய தர நிர்ணய அமைவனம் நடத்தியது

Posted On: 08 NOV 2023 5:25PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி..எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

ஒவ்வொரு மாதமும் திட்டமிடப்பட்டுள்ள தொழில்துறையின் நன்மைக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர நியமம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சியை பிஐஎஸ் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்திய தர நிர்ணய  அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று (08 நவம்பர் 2023, புதன்கிழமை) "விண்வெளி தரநிலைகள்" குறித்த பிஐஎஸ் - மானக் மந்தன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

பிஐஎஸ்-இன் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி மற்றும்  இயக்குநர் திருமதி.ஜி.பவானி வரவேற்புரை ஆற்றினார். திரு தெற்கு மண்டலத்தின் துணை தலைமை இயக்குநர் யு.எஸ்.பி யாதவ், சிறப்புரையாற்றினார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

***

PKV/KPG


(Release ID: 1975664) Visitor Counter : 100


Link mygov.in