சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம்
प्रविष्टि तिथि:
31 OCT 2023 4:57PM by PIB Chennai
சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
சிவிஆர்டிஇ-யின் இயக்குநர் திரு ராஜேஷ்குமார் காலை 9.30 மணிக்கு "ஒற்றுமைக்கான ஓட்டத்தை" கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேச ஒற்றுமையில் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார். இந்தியா பல்வேறு இன மற்றும் மொழிக் குழுக்களைக் கொண்ட பன்முகத்தன்மையுடன் கூடிய நாடு என்றும், "ஒற்றுமைக்கான ஓட்டம்" போன்ற சந்தர்ப்பங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை நினைவுகூர்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் கூறினார்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் சிவிஆர்டிஇ-யை சேர்ந்த சுமார் 150 ஊழியர்கள் பங்கேற்றனர்.




…….
(रिलीज़ आईडी: 1973402)
आगंतुक पटल : 104