• Skip to Content
  • Sitemap
  • Advance Search
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் ரூ.53.39 கோடியில் மீன்பிடி துறைமுக திட்டம் உள்பட 3 உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய மீன் வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 08 OCT 2023 9:06PM by PIB Chennai

இந்திய அரசின், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மூலம் சாகர் பரிக்கரமா 9வது பயண திட்டம், PMMSY உள்ள கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தல், மீனவர்களுடன் கலந்துரையாடல் மீனவர்களுக்கான மத்திய மாநில நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபலா தலைமையில் புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று (08.10.2023) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன்,மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். புதுச்சேரி முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி ள் விழாவினை துவக்கிவைத்து தலைமையுரையாற்றி மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில்  புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர். திரு. R.செல்வம் ,  உள்துறை அமைச்சர் திரு.A.நமச்சிவாயம்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு.K.லட்சுமிநாராயணன் ,  விவசாயத்துறை அமைச்சர் திரு.C.ஜெயக்குமார்.  குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், திரு.AK.சாய்.ஜே. சரவணன் குமார்.  சட்டமன்ற உறுப்பினர் திரு. ப.லட்சுமிகாந்தன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கீழ்கண்ட PMMSY உள்கட்டமைப்பு திட்டங்களை  மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபலா துவக்கிவைத்தார்.

1) தேங்காய்திட்டில் (அரிக்கமேடு) ரூ.53.39 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுக விரிவாக்க/கட்டுமான திட்டம்.

2) பெரிய காலாபட்டில் ரூ.20.14கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் அமைத்தல்.

3) நல்லவாடில் ரூ.18.94 அமைத்தல். கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் மையம்

வ எண்

 

தொகை

கீழ்காணும் மத்திய அரசு நலத்திட்ட உதவிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.திரு.L.முருகன் ஆகியோர்  வழங்கினார்

1

2 நபருக்கு குளிரூட்டப்பட்ட கனரக வாகனம் (Insulated Vehicle) மானிய விலையில் வழங்கினார்

ரூ.20.00

(லட்சம்)

2

1140 மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை (KCC) வழங்கினார்.

ரூ.3.01

(கோடி)

கீழ்காணும், மாநில அரசு நலத்திட்ட உதவிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. K.லட்சுமிநாராயணன்  முன்னிலையில், முதலமைச்சர் திரு. N. ரங்கசாமி  வழங்கினார்.

3

 

  1. புதுச்சேரி யூனியன் பிரதேச மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ. 3,000/- வீதம் சுமார் 18504 எண்ணிகையிலான மீனவ குடும்பங்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது

 

 

5.55

(கோடி)

 

 

  1. 2023-24ஆம் ஆண்டிற்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.6,500/- வீதம் இரண்டாவது கட்டமாக 1010 மீனவ குடும்பங்களுக்கு ரூ.65,65,000/- அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது.

ரூ.65.65

(லட்சம்

 

 

  1. இயற்கை சீற்ற காலங்களில் சேதமடைந்த படகு/வலைகளுக்கு, மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு பாண்டிச்சேரி மீனவர் நலம் மற்றும் துயர் துடைப்பு சங்கத்தின் மூலம் நிவாரணமாக 504 மீனவர்களுக்கு ரூ.49.52 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது

ரூ.49.52

(லட்சம்)

 

 

ரூ.6.70 கோடி

 

இந்நிகழ்ச்சியில மீன்வளத்துறை இயக்குநர் திரு.A.முகமது இஸ்மாயில்  நன்றியுரையாற்றினார். மீன்வளத்துறை இணை இயக்குநர் திரு.K.தெய்வசிகாமணி , துறை அதிகாரிகள், புதுச்சேரி பகுதியை சேர்ந்த மீனவ கிராமபஞ்சாயத்து தலைவர்கள், மீனவ கூட்டுறவு சங்கத்தினர்கள், விசைப்படகு மற்றும் FRP விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மீனவ நலச்சங்கங்கள் மற்றும் ஏராளமான மீனவபெருமக்கள் கலந்துகொண்டனர்.

    

  

*** 

 


(Release ID: 1965813) Visitor Counter : 35


Link mygov.in