• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் 13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன: மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை செயலாளர்

प्रविष्टि तिथि: 25 SEP 2023 8:16PM by PIB Chennai

தமிழ்நாட்டில் 13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை செயலாளர் திரு. டி. கே. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் இந்திய கலங்கரை விளக்கங்களின் திருவிழாவை மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை செயலர் திரு. டி. கே. ராமச்சந்திரன் தொடங்கி வைத்து கலங்கரை விளக்கத்தை பார்வையிட்டார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் முதன் முறையாக கலங்கரை விளக்க தினம் கொண்டாடப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் 203 கலங்கரை விளக்கங்கள் உள்ளன எனவும், இதில் கோவா கலங்கரை விளக்கம் 411 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் தெரிவித்தார். இதே போல, மாமல்லபுரம் கலங்கரை விளக்கமானது 8 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறினார்.  சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு 75 இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்டு, கலங்கரை விளக்க சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், ஒவ்வொரு கலங்கரை விளக்கங்களும் அதனதன் பழமை, பெருமைகளை கொண்டுள்ளன எனவும், அவை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த கலங்கரை விளக்க திருவிழா கொண்டாடப்படுகிறது எனவும் தெரிவித்தார். கோவாவில் தொடங்கிய இந்த விழா நாடு முழுவதும் 75 இடங்களில் நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கலங்கரை விளக்கங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்க அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். இதன் காரணமாக தற்போது கலங்கரை விளக்கத்தை பார்வையிட வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன எனவும் தமிழ்நாட்டில் 13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், கலங்கரை விளக்கங்களை சுற்றிப் பார்க்க பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், கலங்கரை விளக்கங்களின் பெருமைகளை தெரிந்து கொள்ள பொதுமக்கள் கலங்கரை விளக்கத் திருவிழாக்களில் பங்கேற்க வேண்டுமென தெரிவித்தார்.

---

AP/AD/TV/KPG


(रिलीज़ आईडी: 1960662) आगंतुक पटल : 276
Link mygov.in
National Portal Of India
STQC Certificate