• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 29 AUG 2023 6:18PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுவைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூடானி, ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டியின் தலைவர் திரு பிரதீப் நரங், சர்வதேச உறவுகள் பேராசிரியர் சுப்ரமணியம் ராஜு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரிச்சா திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் ஒரு கூட்டாண்மையாக இருக்கும் என்று ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளரும், புதுவைப் பல்கலைக்கழக ஸ்ரீ அரவிந்தர் இருக்கையின் தலைவருமான டாக்டர் ரிச்சா திவாரி கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயிற்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், விவாதங்கள், விளையாட்டு நிகழ்வுகள், கலந்துரையாடல் குழுக்கள் மாற்றத்திற்கான வழிகளாக மாறும் என்று டாக்டர் திவாரி கூறினார். மேலும் புதுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள், ஆராய்ச்சி திட்டங்களைத் தொடங்குவது பற்றியும், ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் சிந்தனை மற்றும் ஒருங்கிணைந்த கல்வியின் கொள்கைகள் குறித்த சிறப்புப் படிப்புகள், கோட்பாட்டு அறிவு, உலக சவால்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை விட அதிகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் மனிதகுலத்தின் மிக உயர்ந்த தரிசனங்களை நிலைநிறுத்துவதற்கு இரு தரப்பிலிருந்தும் அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வாய்ப்புகளையும், நோக்கங்களையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் குர்மீத் சிங், எஸ்ஏஎஸ் தலைவர் திரு பிரதீப் நரங் முன்னிலையில், ஆய்வுகள்  பிரிவு இயக்குநர்  பேராசிரியர் தரணிக்கரசு, பதிவாளர்  பேராசிரியர் ரஜ்னீஷ் பூடானி, நிதி அலுவலர் பேராசிரியர் லாசர், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீ அரவிந்தரின் தத்துவத்தைப் புரிந்துகொள்வது காலத்தின் தேவை என்று துணைவேந்தர், பேராசிரியர் குர்மீத் சிங்  தெரிவித்தார். எப்போதும் வளர்ந்து வரும் சமூக இயக்கவியலுடன் ஸ்ரீ அரவிந்தரின் போதனைகளும் தத்துவங்களும் ஆழ்ந்த ஞானம் மற்றும் பொருத்தத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

ஸ்ரீ அரவிந்தர் ஒரு விரிவான உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார், அது அவரது காலத்தின் சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், நவீன உலகின் சிக்கல்களுடன் வலுவாக எதிரொலிக்கும் காலமற்ற நுண்ணறிவுகளையும் வழங்குகிறது என்று அவர் கூறினார். புதுவை பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் சமுதாயம் இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை பேராசிரியர் குர்மீத் சிங் தெரிவித்தார். அவரது உரையைத் தொடர்ந்து ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டியின் தலைவர் திரு பிரதீப் நரங் உரை நிகழ்த்தினார். இந்த ஒத்துழைப்பு மற்றும் அதன் ஆற்றல்மிக்க வாய்ப்புகள் குறித்து அவர் பேசினார். மதத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். புதுவை பல்கலைக்கழகத்திற்கும் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பொருள் மற்றும் அறிவுசார் அம்சங்களை மட்டுமின்றி, ஆன்மீகப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய மனித ஆற்றலின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக பேராசிரியர் சுப்ரமணியம் ராஜு வரவேற்றுப் பேசினார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரிச்சா திவாரி நன்றி கூறினார்.

**

AD/SMB/AG/GK


(Release ID: 1953287) Visitor Counter : 103


Link mygov.in