சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழகத்தில் 16 முன்னேற விரும்பும் வட்டாரங்கள் தேர்வு
Posted On:
02 AUG 2023 6:54PM by PIB Chennai
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 வட்டாரங்கள் முன்னேற விரும்பும் வட்டாரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் ஆர் தர்மர் கேட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
முன்னேற விரும்பும் வட்டாரங்கள் திட்டம் 2023-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதனை நித்தி ஆயோக் செயல்படுத்துகிறது.
நாட்டில் உள்ள வளர்ச்சி அடையாத, வாழ்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கொண்ட வட்டாரங்களை தேர்வு செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2023-2024-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 27 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 500 வட்டாரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, அடிப்படை உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள வட்டாரங்கள் விவரம்
|
மாநிலம்
|
மாவட்டம்
|
வட்டாரம்
|
-
|
தமிழ்நாடு
|
அரியலூர்
|
ஆண்டிமடம்
|
-
|
கள்ளக்குறிச்சி
|
கல்வராயன் மலை
|
-
|
கரூர்
|
தோகை மலை
|
-
|
பெரம்பலூர்
|
ஆலத்தூர்
|
-
|
புதுக்கோட்டை
|
திருவரங்குளம்
|
-
|
ராமநாதபுரம்
|
திருவாடானை
|
-
|
ராணிப்பேட்டை
|
திமிரி
|
-
|
சிவகங்கை
|
திருப்பத்தூர்
|
-
|
நீலகிரி
|
கோத்தகிரி
|
-
|
தென்காசி
|
மேலநீலிதநல்லூர்
|
-
|
திருவண்ணாமலை
|
ஜவ்வாது மலை
|
-
|
திருச்சிராப்பள்ளி
|
துறையூர்
|
-
|
திருநெல்வேலி
|
நாங்குநேரி
|
-
|
வேலூர்
|
கே.வி.குப்பம்
|
-
|
விழுப்புரம்
|
திருவெண்ணைநல்லூர்
|
-
|
விருதுநகர்
|
திருச்சுழி
|
***
AP/PKV/AG/KPG
(Release ID: 1945182)
Visitor Counter : 122