• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பி எஸ் எல் வி சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது


செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்திய பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் உரை

Posted On: 22 APR 2023 8:12PM by PIB Chennai

பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிஎஸ்எல்வி / என்எஸ்ஐஎல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.  பிஎஸ்எல்வி ராக்கெட் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு மிகவும் சிறந்தது என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. தற்போது என் எஸ் ஐ எல் நிறுவனம் வசம் 10 பி எஸ் எல் வி ராக்கெட்டுகள் முழுக்க வணிகரீதியான பயன்பாட்டுக்கென இருப்பதாகவும் இதன் மூலம் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தி, என் எஸ் ஐ எல் நிறுவனம் பல்வேறு ராக்கெட்களை அதிக அளவில் தயாரிக்க உதவும் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 3 மாதங்களில் பிஎஸ்எல்வி / ஜிஎஸ்எல்வி உள்பட வரிசையாக பல ராக்கெட்கள் ஏவப்பட்ட உள்ளன என்றும் தெரிவித்தார். நாட்டில் இப்போது ஐந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை தயாரித்து வருவதாகவும், இவை வணிகரீதியான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமெனவும் தெரிவித்தார். 2024 தொடக்கத்தில் காகன்யான் முதல் சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

***

AD/TV/DL


(Release ID: 1918826) Visitor Counter : 124


Link mygov.in