சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத் திறப்பு விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்
प्रविष्टि तिथि:
07 APR 2023 6:45PM by PIB Chennai
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் (கட்டம் I) நாளை 08.04.2023 திறந்து வைக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் முக்கியப் பிரமுகர்களின் வருகையை கருத்தில் கொண்டு, 14.50 மணி முதல் 15.15 மணி வரை வாகனங்கள் உள்நுழைய (மேம்பாலத்தில்) தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள், தங்களது சுமூகமான போக்குவரத்திற்காக முன்கூட்டியே சென்னை விமான நிலையத்தை அடைவதற்கு திட்டமிடலாம். மேலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் உள்நாட்டு / சர்வதேச முனையங்களின் வருகைப் பகுதியை அடைந்து அதாவது தரைத்தளத்திலிருந்து அங்கிருந்து மின் தூக்கி மூலம்
உள்நாட்டு / சர்வதேச முனையங்களின் புறப்பாட்டை அடையலாம். மற்ற நேரங்களில் விமான நிலையப் போக்குவரத்து வழக்கம் போலவே இருக்கும். எனவே, சிரமத்தைத் தவிர்க்க, மேற்கூறிய காலத்திற்கு விமான நிலையத்தில் போக்குவரத்து வழித்தடத்தில் உள்ள இந்த மாற்றம் குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்க விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மேலே உள்ள தகவல்களைக் கவனத்தில் கொண்டு, அதன்படி விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-----
SM/CR/PG
(रिलीज़ आईडी: 1914678)
आगंतुक पटल : 120