சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டங்கள்
Posted On:
29 MAR 2023 4:45PM by PIB Chennai
மத்திய பட்டு வாரியம் மூலம் மத்திய அரசு 2021-22 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டில் பட்டு வளர்ப்பு உட்பட நாட்டின் ஒட்டுமொத்த பட்டு வளர்ப்புத் தொழிலின் வளர்ச்சிக்காக முழுமையான பட்டு வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் "சில்க் சமக்ரா-2" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு பட்டு வளர்ப்பு இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், திருச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், மயில்டுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு "சில்க் சமக்ரா-2" திட்டத்தின் கீழ் ரூ. 41.20 கோடி நிதி உதவி மத்திய அரசால் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் சில்க் சமக்ரா உள்ளிட்ட மத்திய பட்டு வாரியத்தின் பட்டுப் புழு வளர்ப்புத் திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட / விடுவிக்கப்பட்ட மத்திய உதவி விவரங்கள்:
ஆண்டு
|
திட்டம்
|
மத்திய நிதி ஒதுக்கீடு / விடுவிக்கப்பட்டது
(ரூபாய்- கோடியில்)
|
2014-15
|
வினையூக்க மேம்பாட்டுத் திட்டம் ( CDP)
|
14.09
|
2015-16
|
பட்டு வளர்ப்பு தொழில் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISDSI)
|
4.91
|
2016-17
|
9.49
|
2017-18
|
பட்டு சமக்ரா (Silk Samagra)
|
11.10
|
2018-19
|
6.22
|
2019-20
|
14.52
|
2020-21
|
14.33
|
2021-22
|
பட்டு சமக்ரா- 2(Silk Samagra-2)
|
19.68
|
2022-23
|
21.52
|
Total
|
115.86
|
மல்பெரி எனப்படும் முசுக்கொட்டை பட்டு உற்பத்திக்கான வாய்ப்பைக் கொண்ட ஒரு முக்கியமான பாரம்பரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் பைவோல்டின் (Bivoltine) இனப்பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 2,373 மெட்ரிக் டன் கச்சா பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 25,500 பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் உள்ளனர். ஓசூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேன்கனிக்கோட்டை, பாலக்கோடு, பென்னாகரம், காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், தஞ்சை, மதுரை, கோயம்புத்தூர் ஆகியவை மாநிலத்தின் முக்கியமான பட்டு நூல் தயாரிப்பு மையங்களாக உள்ளன.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.
****
AD/PLM/RS/KPG
(Release ID: 1911822)
Visitor Counter : 531