ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் மாநிலத்துக்கு முதல் ரயில் இணைப்பை ஏற்படுத்தும் பணியில் முன்னேற்றம் - 5.3 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதையில் துளையிடும் பணி நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 4:59PM by PIB Chennai

சிக்கிம் மாநிலத்துக்கு முதல் ரயில் இணைப்பை ஏற்படுத்தும் சிவோக் – ராங்போ புதிய ரயில் பாதைத் திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மிக நீளமான 5.3 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையில் துளையிடும் பணி நேற்று (நவம்பர் 27) நிறைவடைந்தது. இதன் மூலம் இத்திட்டத்தில் உள்ள 14 சுரங்கப் பாதைகளிலும் துளையிடும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.

இரு முனைகளில் இருந்தும், இரண்டு அணுகு சுரங்கங்கள் வழியாகவும் 5.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 10-வது சுரங்கப் பாதையில் துளையிடும் பணி நடைபெற்றது. தற்போது இரு பக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக சுரங்கப் பாதைக்குள் கான்கிரீட் பூச்சு, தண்டவாளம் அமைத்தல், ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.

மொத்தம் 45 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த அகல ரயில் பாதை, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கலிம்போங் மாவட்டங்கள் வழியாகவும், சிக்கிமின் பாக்யோங் மாவட்டம் வழியாகவும் செல்கிறது. இமயமலையின் கடினமான மலைப்பகுதியில் அமைக்கப்படும் இத்திட்டத்தில் 14 சுரங்கங்கள் உள்ளன. இவை மொத்தப் பாதையின் சுமார் 86 சதவீத நீளத்தைக் கொண்டுள்ளன. மேலும், 23 பாலங்களும் அமைக்கப்படுகின்றன.

சிவோக், ரியாங், மெல்லி, ராங்போ ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தீஸ்தா பஜாரில் நிலத்தடி ரயில் நிறுத்தமும் அமையும்.

இந்த ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்த பின், தேசிய நெடுஞ்சாலை 10-க்கு மாற்றாக பாதுகாப்பான, விரைவான போக்குவரத்து வசதி கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லவும், உள்ளூர் வணிகம், சுற்றுலாத் துறை வளரவும் இது உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343068&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343196) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali