குடும்ப உறவுகளை மதித்துப்பேண வேண்டும் எனவும் அன்பானவர்களை அரவணைக்க வேண்டும் என்றும் நெதர்லாந்து நாட்டுத் திரைப்படமான 'எ பேமிலி' (A Family) திரைப்படத்தின் இயக்குநர் திரு மீஸ் பெய்னன்பர்க், நடிகர் திரு பீட்டர் எம்ப்ரெக்ட்ஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசினர். பெற்றோருக்கு இடையிலான மோதல்கள் குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், குடும்பப் பிரிவால் குழந்தைகள் எதிர்கொள்ளும் உணர்வுகளையும் இத்திரைப்படம் எடுத்துரைப்பதாக இயக்குநர் தெரிவித்தார்.
பெற்றோர் தங்களது செயல்பாடுகள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பல நேரங்களில் தங்களது செயல்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மக்கள் உணர்வதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தத் திரைப்படத்தில் ஜேக்கப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரு பீட்டர் எம்ப்ரெக்ட்ஸ், தங்களுக்கு நெருக்கமானவர்களைத் அன்புடன் அரவணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியதாக இயக்குநர் தெரிவித்தார்.
நினா, எலி என்ற உடன்பிறந்த இரு குழந்தைகள் பெற்றோரின் பிரிவை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதே படத்தின் மையக்கதை. 57-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் படத்தைத் திரையிட வாய்ப்பளித்ததற்காக இயக்குநரும் நடிகரும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342995®=3
****
SK/PLM/RJ