குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராய்ப்பூரில் தேசிய எஸ்சி - எஸ்டி தொழில்முனைவோர் உதவி மையத்தை நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 5:41PM by PIB Chennai

பட்டியல் சமூக, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தேசிய எஸ்சி - எஸ்டி தொழில்முனைவோர் உதவி மையத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட உள்ளது. இதனை நாளை (2026 நவம்பர் 28) மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி திறந்து வைக்கிறார். இது தொடர்பான மாநாடு ஒன்றையும் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில அமைச்சர்கள் திரு குரு குஷ்வந்த் சாஹேப், திரு லகன் லால் தேவாங்கன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்க உள்ளனர். புதிய அலுவலகம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், பதிவு, நிதி உதவி, அரசு கொள்முதல் வாய்ப்புகளைப் பெறுதல் போன்றவற்றில் உதவும்.

பட்டியல் சமூக, பழங்குடியின தொழில்முனைவோருக்கு அரசு கொள்முதலில் அதிக வாய்ப்புகளை உருவாக்குவது, நாளை நடைபெறும் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மத்திய அரசின் கொள்முதல் கொள்கைப்படி, மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்களது ஆண்டுக் கொள்முதலில் குறைந்தது 25 சதவீதத்தை குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும். இதில் 4 சதவீதம் பட்டியலின, பழங்குடியின நிறுவனங்களுக்கும், 3 சதவீதம் பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2016 அக்டோபரில் தேசிய எஸ்சி-எஸ்டி தொழில்முனைவோர் மையத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் பட்டியலின, பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து அரசு கொள்முதல் செய்வது 36 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் :

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342669&reg=3&lang=1

(Release ID: 2342669)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342890) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese