கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) ஒரு பகுதியாக இயக்குநர் காமக்யா நாராயண் சிங், தயாரிப்பாளர் ரவீந்திர சங்கவி ஆகியோர், 'தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்', 'டெமோகிராஃபி இஸ் டெஸ்டினி' ஆகியவற்றின் உருவாக்கம் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஆய்வு, கதாபாத்திர உருவாக்கம், சிக்கலான விஷயங்களை திரைப்படம் மூலம் முன்வைப்பதில் உள்ள சவால்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை இயக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட காமாக்யா நாராயண், இது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு கதை என்று குறிப்பிட்டார். பல கதைகளை ஒன்றிணைக்கும் அதே வேளையில், அவற்றுக்கிடையே ஒரு பொதுவான உணர்வுப்பூர்வமான இழையைப் பராமரிப்பது சவாலானதாகவும், அதே சமயம் நிறைவான அனுபவமாகவும் இருந்ததாக அவர் தெரிவித்தார். வெவ்வேறு கதைகளை இணைப்பதில் இசையின் பங்கினைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் படம் மூன்று தனித்தனி கதைகளை ஆராய்ந்தாலும், அவற்றுக்கு இடையேயான பொதுவான உணர்வுப்பூர்வமான மையம் அவற்றை ஒன்றிணைக்க உதவியது என்று விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342737®=3&lang=1
****
SK/BR/SH