இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 5:12PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலத்தின் முக்கிய ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டமான ரிஷிகேஷ் – கர்ணபிரயாக் ரயில் திட்டத்தில், 6.59 கிலோ மீட்டர் நீளமுள்ள 14-வது சுரங்கப் பாதையின் இரு பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முக்கியப் பணியை ரயில்வே வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தப் பணியில், சுரங்கத்தின் ஒரு பக்கத்தில் 4.7 கிலோமீட்டர் தொலைவுக்கும், மறுபக்கத்தில் 1.79 கிலோமீட்டர் தொலைவுக்கும் தோண்டப்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன.
முதல் நுழைவுப் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களுக்குக் கீழே, தளர்வான மண் பகுதியில் 110 மீட்டர் நீளமுள்ள மூன்று ரயில் பாதைகளுக்கான சுரங்கம் தோண்டப்பட்டது. இதன் மேற்பகுதியில் 20 முதல் 30 மீட்டர் ஆழம் வரை மண்ணும் பாறைகளும் இருந்தன. பாதுகாப்பான முறையில் சுரங்கம் அமைக்க சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாவது நுழைவுப் பகுதியில் 30 முதல் 35 மீட்டர் ஆழமுள்ள நுண்தூண்கள், 15 முதல் 20 மீட்டர் நீளமுள்ள பாறை இணைப்புக் கம்பிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு சரிவுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
மார்ச் 2024-ல் இந்தப் பகுதியில் சுரங்கப் பணிகள் தொடங்கின. அருகிலுள்ள குடியிருப்புகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பணிகள் பகல் நேரத்தில் மட்டுமே கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டன.
4.7 கிலோ மீட்டர் சுரங்கப் பணியின்போது காற்றோட்டத்தைச் சீராக வைத்திருக்க சிறப்பு காற்றோட்ட அமைப்புகளும் பயன்படுத்தப்பட்டன.
இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடைந்த பின் உத்தராகண்ட் மலைப்பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து மேம்படும். சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக யாத்திரிகர்கள் ஆகியோர் எளிதாகப் பயணம் செய்வதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342624®=3&lang=1
(Release ID: 2342624)
****
SK/PLM/SH