57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ஐஎஃப்எஃப்ஐ-ல் ‘கம் வித் மீ’ போர்த்துகீசியத் திரைப்படத்தின் உலகளாவிய திரையிடல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2026 6:41PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342871Views: 5

உலக திரைப்படப் பிரிவில் போர்த்துகீசியத் திரைப்படமான 'கம் வித் மீ' உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டதைத்  தொடர்ந்து, 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) ஒரு பகுதியாக, இயக்குநர் ஜோவோ லமீரா, நடிகர் அன்டோனியோ சிமாவோ, தயாரிப்பாளர் டேனியல் பெரேரா ஆகியோர் இன்று கோவாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். திரைப்படத்தின் கருப்பொருள்களான நட்பு, அதன் கலைநயமிக்க தன்மையுடன் ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு மத்தியில் திரையரங்க அனுபவத்தின் தொடர்ச்சியான முக்கியத்துவம் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் விவாதித்தனர்.

திரைப்படங்களை ஒன்றாகப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நடிகர் அன்டோனியோ சிமாவோ, போர்ச்சுகலில் திரையரங்குகளுக்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும், அதற்குப் பதிலாக வீட்டிலேயே திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் அதிகரித்து வருவதையும் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார். திரையரங்கிற்குச் செல்வது என்பது மற்றவர்களைச் சந்திப்பதையும், ஒரு கூட்டு கலாச்சார அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

தனது தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம்,  திரையரங்க வெளியீடுகளுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகத் தயாரிப்பாளர் டேனியல் பெரேரா குறிப்பிட்டார். ஸ்ட்ரீமிங் தளங்களின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டாலும், அவற்றை திரையரங்க அனுபவத்திற்கு மாற்றாக அல்லாமல், அதற்கு வலிமை சேர்க்கும் ஊடகமாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342734&reg=3&lang=1

****

SK/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342871
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026