இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2026 4:20PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை (2026 நவம்பர் 28) உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் செல்கிறார்.
அங்கு நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் பங்கேற்கிறார்.
காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் கலாசார, நாகரிக உறவுகளைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வாரணாசியில் உள்ள ஸ்ரீ கால பைரவர் கோயில், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவற்றில் வழிபாடு செய்யவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342556®=3&lang=1
(Release ID : 2342556)
****
SK/PLM/SH